மகள் வயது நடிகையை டார்ச்சர் செய்த ஹீரோ.. சூட்டிங் ஸ்பாட்டில் கொடுத்த தொல்லை

மகள் வயது நடிகையை டார்ச்சர் செய்த ஹீரோ.. சூட்டிங் ஸ்பாட்டில் கொடுத்த தொல்லை

நடிகைகள் கல்யாணம் செய்து கொண்டாலே அதன் பிறகு அவர்களுக்கு ஹீரோயின் வாய்ப்புகள் வருவது கஷ்டம் தான். ஆனால் ஹீரோக்களுக்கு அந்த விதிமுறைகள் எல்லாம் கிடையாது. 70 வயதை தாண்டினால் கூட அவர்கள் இளம் ஹீரோக்கள் தான்.

அப்படித்தான் 60 வயதை நெருங்கப் போகும் நடிகர் ஒருவர் இன்னும் ஹீரோவாக நடித்து வருகிறார். இதைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் அவருடன் நடிக்கும் நடிகைகள் எல்லாமே இளம் ஹீரோயின்கள் தான்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. அந்த படத்தில் இவருக்கு ஹீரோயினாக நடித்த இளம் நடிகை தற்போது நடிகரை பற்றிய பல குற்றச்சாட்டுகளை தன் நெருக்கமான நண்பர்களிடம் கூறி புலம்பி வருகிறாராம்.

அதாவது நடிகர் ஹீரோயின்கள் தனக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பார். அப்படித்தான் இந்த இளம் நடிகையிடமும் தன் வேலையை காட்டி இருக்கிறார். ஆனால் நடிகையோ அதற்கு முடியாது என மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

இதனால் அந்த ஹீரோ படத்தில் ஏகப்பட்ட நெருக்கமான காட்சிகளை வைக்கும் படி இயக்குனரிடம் சொல்லி இருக்கிறார். இதில் ஒன்றும் செய்ய முடியாத நடிகை வேறு வழியில்லாமல் அந்த காட்சிகளில் நடித்துக் கொடுத்தாராம்.

ஆனால் அந்த சமயத்தில் எல்லாம் நடிகரின் தொல்லை அதிகமாக இருக்கும். அவர் பெண்கள் விஷயத்தில் ரொம்பவும் வீக் என அந்த நடிகை அதிர வைக்கும் குற்றச்சாட்டை வைத்துள்ளார். இதுதான் இப்போது அக்கடதேசத்தில் சத்தமில்லாமல் பேசப்பட்டு வருகிறது.

LATEST News

Trending News