செல்வராகவன் - ஆண்ட்ரியாவின் அந்த வீடியோ இருக்காம்.. ஓயாத சுசித்ரா.. இன்னும் என்ன கிளம்ப போகுதோ?
ஆயிரத்தில் ஒருவன் பட சமயத்தில் செல்வராகவனையும், ஆண்ட்ரியாவையும் இணைத்து கிசுகிசுக்கப்பட்டது. அது அந்த சமயத்தில் பெரும் பேசுபொருளாக இருந்தது. இந்நிலையில் பின்னணி பாடகி சுசித்ரா சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "தனுஷ் எனக்கு தம்பி மாதிரி. அவரை எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஆனால் அவர் என்னை செய்த பிராங்க்தான் எனக்கு பெரும் டேமேஜை ஏற்படுத்திவிட்டது. நான் கொடுக்கும் பேட்டிகளை அவர் கேட்டிருக்கிறார் என்பதை நினைக்கும்போது நிம்மதியாக இருக்கிறது.
இந்தப் பிரச்னைகளுக்கு அப்புறம்கூட தாஜ் ஹோட்டலில் அவரை சந்தித்தேன். அப்போது உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும் லஞ்ச்சுக்கு வா என்றுதான் கூப்பிட்டேன். அவர் ஏன் கார்த்திக் கேங்கில் சேர்ந்து கெட்டு போனார் என்று தெரியவில்லை. பல வருடங்களுக்கு முன்பு தனுஷ் என்னை தொடர்புகொண்டு, நான் ஒரு குறும்படம் எடுக்கிறேன். வந்து நடித்து கொடு என்று சொன்னார். ஆனால் நானோ; இப்படித்தான் ஒரு ஷார்ட் பிலிம் எடுக்கும்போது செல்வராகவன் - ஆண்ட்ரியா காம்ப்ரமைஸ் வீடியோ இருக்குனு சொல்றாங்க. கலை நோக்கத்தோடுதான்னு சொல்வீர்கள். ஆனால் பிரச்னை வந்துவிடும் எனவே நான் வரவில்லை என்று மறுத்துவிட்டேன்" என்றார். . இதனைப் பார்த்த ரசிகர்கள் உச்சக்கட்ட அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.