மோசமாக நடந்து கொண்டார்.. தனுஷ் பட நடிகர் மீது பெண் இயக்குநர் குற்றச்சாட்டு!
ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி மலையாள திரையுலகையே உலுக்கியுள்ளது. இந்த அறிக்கை வெளியான தைரியத்தில் பல நடிகைகள் பல வருடங்களுக்கு முன்பு தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியான துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாக கூறிவருகின்றனர். அந்த வகையில்,பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது காவல்துறையில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பெண் இயக்குநர் ஒருவர், நடிகர் லால் படப்பிடிப்பு தளத்தில் மோசமாக நடத்தினார் என குற்றம்சாட்டி உள்ளார்.
இது குறித்து,யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பெண் இயக்குனர் ரேவதி எஸ். வர்மா, மாட் மேட் படப்பிடிப்பின் போது நடிகர் லால், நான் பெண் என்பதால், என்னை மோசமான முறையில் நடத்தினார். காட்சிகளை எடுப்பதற்கு முன் இயக்குநராக நான் சொல்வதை கேட்காமல் படப்பிடிப்பு தளத்தில் அவமதித்தார். இதுஒரு முறை அல்ல பலமுறை அப்படி நடந்து கொண்டார். இவர் நடந்து கொண்டதை பார்த்து பலரும் இதையே செய்தனர்.
படப்பிடிப்பின் போது, நான் ஷாட் ஒகே சொன்னதற்குப் பின், நாற்காலியில் அமருங்கள் என்று சொன்னேன். அதற்கு அங்கிருந்த பெரிய நடிகர் ஒருவர் "அப்படி நீங்கள் சொல்வதை கேட்பதற்கு டாய்லெட்டில் போய் அமர்ந்துகொள்ளலாம் என சொன்னார். அதைக்கேட்டு எனக்கு மிகவும் அவமானமாக இருந்தது. நான் பெண் என்பதால், என்னை காயப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அந்த பெரிய நடிகர் அப்படி பேசினார். இதைக்கேட்டு எனக்கு மயக்கமே வந்துவிட்டது. இத்தனை ஆண்டுகள் ஆகியும் இந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியவில்லை என்று கூறியுள்ளார். மேலும்,ஹேமா கமிட்டி அறிக்கையில், குற்றம்சாட்டப்பட்டவர்கள் பெயரை வெளியிடாதது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று இந்த பேட்டியில் இயக்குநர் ரேவதி வர்மா பேசி உள்ளார்.
மலையான நடிகரான நடிகர் லால்,தமிழில் விஷால் நடித்த சண்டக்கோழி படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் தனுஷ் நடித்த கர்ணன், மாமன்னன், சுல்தான்,ஸ்டார் போன்ற திரைப்படத்தில் முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இவர் தமிழ், மலையாளம் , தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.