இயக்குனர் அட்லீயின் மகனா இது!
தமிழ் சினிமாவில் பட்டையை கிளப்பி கொண்டிருந்த இயக்குனர் அட்லீ இன்று இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனராக மாறியுள்ளார்.
ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அட்லீ. முதல் படத்திலேயே தனது வெற்றியை பதித்தார். இதை தொடர்ந்து தளபதி விஜய்யுடன் இணைந்த அட்லீ தெறி, மெர்சல், பிகில் என தொடர் வெற்றி படங்களை கொடுத்தார்.
இதன்பின் இந்திய சினிமாவின் டாப் ஹீரோவான ஷாருக்கான் உடன் கைகோர்த்தார். தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட் சென்று ப்ளாக் பஸ்டர் வெற்றி படத்தையும் கொடுத்து தனக்கென்று ஒரு தனி இடத்தையும் பிடித்துவிட்டார்.
அடுத்ததாக அட்லீ யாருடன் இணைந்து பணியாற்ற போகிறார் என்பது தான் சினிமா துறையில் ஹாட் டாபிக். ஆனால், இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. அதற்காக ரசிகர்களும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இயக்குனர் அட்லீ, பிரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். இந்த நிலையில் தனது மகன், மனைவியுடன் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அட்லீ கொண்டாடியுள்ளனர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், அட்லீயின் மகனா இது நன்றாக வளர்ந்து விட்டாரே என கூறி வருகிறார்கள்.