அட்ஜஸ்ட்மெண்ட்காக நடிக்க வரல..அதற்கு வேற தொழில் இருக்கு.. செருப்பால அடிப்பேன்.. கொந்தளித்த கஸ்தூரி!
மலையாள சினிமாவில் ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, பல நடிகைகள் பல முன்னணி நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இதைத்தொடர்ந்து, நடிகைகள் அட்ஜெஸ்ட்மென்ட் செய்துதான் படவாய்ப்பை பெறுகிறார்கள் என்கிற பேச்சு பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், நடிகை கஸ்தூரி இதுகுறித்து ஆவேசமாக பேசி உள்ளார்.
சினிமாவில் நடிகை அட்ஜெஸ்ட்மென்ட் செய்துதான் வாய்ப்பை பெறுகிறார்கள் என்று பத்திரிக்கையில் எழுதிவிட்டால், அது உண்மையாகிவிடுமா? எந்த ஒரு பெண்ணும் படுப்பதற்காக சினிமாவிற்கு வரவில்லை. அதற்கு அவர்கள் நேரடியாக வேறு தொழிலுக்கு போய் இருப்பார்கள். எதற்காக சினிமாவிற்கு வந்து காலையில் எழுந்து மேக்கப் போட்டு வெயில், மழை என எதையும் பார்க்காமல் எதற்கு கஷ்டப்பட வேண்டும். எவனோ ஒருத்தன், நீ அவுத்து போட்டு நடிக்கிறவதானே என்று நாக்கில் நரம்பு இல்லாமல் பேசுவான், உண்மையில் கவர்ச்சி நடிகையாக இருப்பது தான் ரொம்ப கஷ்டம், அவர்களால் ஒரு வேளை சாப்பாட்டைக்கூட விருப்பப்பட்டு சாப்பிட முடியாது.
அவுத்துபோட்டு நடிச்சா ஒழுக்கம் இருக்காது என்று எப்படி சொல்லலாம், ஒரு நடிகையால் குடும்ப பெண்ணாக இருக்க முடியாது என்கிற மனநிலை மற வேண்டும். சினிமா என்றாலே படுப்பது மட்டும் தானா, இயக்குநர், தயாரிப்பாளர்கள், கேமரா மேன்கள் இதற்குத்தான் கஷ்டப்பட்டு சினிமாவிற்கு வருகிறார்களா? அவர்கள் பொம்பள சோக்குத்தான் சினிமாவிற்கு வருகிறார்களா? சினிமா என்பது வேறு, நிஜம் என்பது வேறு இரட்டையும் போட்டு குழப்பிக்கக்கூடாது.
என்னை சிலர் நீயே சத்யராஜ் கிட்ட அல்வா வாங்கியவதானே... நீ பெரிய ஒழுக்கமா? என்று கேட்கிறார்கள், ஆனால் சத்யராசை பார்த்து யாரும், நீ கஸ்தூரிக்கு அல்வா கொடுத்தியே, நீ ஒழுக்கமா என்று கேட்பதில்லை,ஏன் என்றால் இது ஒரு ஆணின் வக்கிரமான புத்தி. எத்தனையோ நடிகர்கள் கொலைகாரனா, திருடனா, குடிகாரனா நடிக்கிறார்கள். அதற்காக அவர்களை ஜெயிலில் போகிறார்களா? ஆனால், ஒரு நடிகை படுக்கை அறை காட்சியில் நடித்தால் மட்டும், அவள் படுத்துவிட்டால் என்று, எப்படி சொல்லாம்.
நடிப்பு என்பது அனைவரும் செய்வது போல அது ஒரு தொழில். கேமராவிற்கு முன்னாடி படுத்தா, கேமராவிற்கு பின்னாடி படு என்று சினிமாவில் யாரும் கேட்க மாட்டார்கள். பொதுமக்கள் தான் அப்படி நினைக்கிறார்கள். அதனால், அப்படி ஒரு முத்திரையை குத்துகிறார்கள். இவர்களுக்காக தினமும் அக்னிபிரேவேசம் செய்ய முடியாது. சினிமாவில் சில பெண்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அவர்களை இந்த சமுதாயம் காயப்படுத்துகிறது. ஆனால்,க ஏமாற்றியவர்களை இந்த சமுதாயம் கேள்வி கேட்பது இல்லை என்று கஸ்தூரி ஆவேசமாக பேசினார்.