கோட் படத்தில் வெங்கட் பிரபு கோட்டை விட்டது எங்கே?..

கோட் படத்தில் வெங்கட் பிரபு கோட்டை விட்டது எங்கே?..

லியோ படத்தில் நரபலி கொடுக்கும் காட்சிகள் இரண்டாம் பாதியில் இடம்பெற்றிருந்த நிலையில் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. அந்த நரபலி கான்செப்ட்டே ரஜினிகாந்தின் கழுகு பட காலத்து கதை என கலாய்க்கப்பட்டது. ஆனால், கோட் படத்தில் வில்லன் போர்ஷனை பார்த்தால் நம்பியார் காலத்து கதையாக உருவாகி இருக்கிறது.

சர்வதேச படமான ஓல்டு பாய் படத்தின் சண்டைக் காட்சி லியோ படத்தில் இடம்பெற்றிருக்கும். அதே போல ஓல்டு பாய் கதையையும் கொஞ்சம் ஒட்டி உரசி எடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு.

கோட் படத்தை பொறுத்தவரைக்கும் போர் அடிக்காமல் ரசிகர்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது. விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் அளவுக்கு ஏகப்பட்ட கேமியோக்கள் மற்றும் ரெஃபரன்ஸ் வைத்து வெங்கட் பிரபு கமர்ஷியல் பேக்கேஜ் படமாக கோட் படத்தைக் கொடுத்துள்ளார்.

எம்ஜிஆர் நடித்த குடியிருந்த கோயில் படத்தில் இருந்து தமிழ் சினிமாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் வெளியான பல்வேறு படங்களில் இளம் வயதில் காணாமல் போகும் மகன் வில்லனிடம் சிக்கி கெட்டவனாக வரும் கதையை பார்த்து பார்த்து புளித்துப் போனாலும் அரைத்த மாவை அரைத்தாலும் அதுக்கும் வேணும் தனித் திறமை என பாடுவதை போல படத்தை எடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு.

விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், யோகி பாபு, ஜெயராம் என அனைவருக்கும் பக்காவான ஸ்கோப் கொடுத்தாலும் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்த ஆரம்பத்தில் இருந்தே விஜய்யின் படத்தை ஏற்றிய வெங்கட் பிரபு கடைசியில் சேப்பாக்கம் ஸ்டேடியத்திலேயே விஜய்யை வைத்து கிளைமேக்ஸை முடித்துள்ள விதம் சூப்பர். ஆனால், வில்லனாக மோகன் சிறப்பாக நடித்திருந்தாலும், அவரது கதை மற்றும் கதாபாத்திர வடிவமைப்பு பழைய நம்பியார் காலத்து ரைட்டப் தான்.

ஹீரோவை பழிவாங்க பல வருடங்கள் வில்லன் காத்திருந்து பழிவாங்கும் கதையை மோகன் கதாபாத்திரத்தில் நைஸாக உருவி சொருகியிருக்கிறார் வெங்கட் பிரபு. அதிலும், புதுமையை கொடுக்க முயன்றாலும் அந்த இடம் தான் படத்திலே ரொம்பவே டல் அடிக்கிறது. மேக்கில் மெனக்கெட்ட அளவுக்கு கதைக்கும் வில்லன் கதாபாத்திரத்துக்கும் பெரியளவில் மெனக்கெடவில்லை என்று தான் தெரிகிறது.

சிஎஸ்கே கிரிக்கெட் போட்டி நடக்கும் இடத்தில் அத்தனை பெரிய சம்பவம் நடக்கிறது. உலகமே பார்க்கும் நிகழ்ச்சியின் போது அசால்ட்டாக இப்படியொரு ஆக்‌ஷன் பிளாக்கை எந்தவொரு லாஜிக்கும் இல்லாமல் வெறும் மேஜிக்காகவே வைத்திருக்கிறார் வெங்கட் பிரபு. அது எந்தளவுக்கு ரசிகர்களை ஈர்க்கும் என்பது கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. தல தோனியும் தல அஜித்தும் தான் கிளைமேக்ஸை விஜய்க்காக காப்பாற்றுகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES