எனக்கு நடந்ததைப் போல் யாருக்கும் நடக்க கூடாது ஓப்பினாக பேசிய பிரபல நடிகை

எனக்கு நடந்ததைப் போல் யாருக்கும் நடக்க கூடாது ஓப்பினாக பேசிய பிரபல நடிகை

மலையாள சினிமா உலகில் மாபெரும் பாலியல் துன்புறுத்தல் நடைபெற்று வந்தது தொடர்பாக ஹேமா கமிட்டி அளித்த விசாரணை அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால் தெலுங்கு சினிமாவில் நடிகை காதம்பரி ஜெத்வானிக்கு நடைபெற்றுள்ள சம்பங்கள் பலரையும் நடுங்கச் செய்துள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே ஊடகங்களிடம் தெரிவித்த நடிகை, ஆந்திர அரசிடம் முறையிட்டு தனக்கு நடந்த அநீதிக்கு நீதிகேட்டுள்ளார். இந்நிலையில் ஹைதராபாத் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை காதம்பரி ஜெத்வானி கண்ணீர் மல்க பேசினார் அது தொடர்பாக இந்த தொகுப்பில் காணலாம்.

அதாவது நடிகை கதாம்பரி ஜெத்வானி குஜராத்தைச் சேர்ந்தவர். இவரது குடும்பமே மருத்துவ குடும்பமாக இருந்துள்ளனர். இவருமே மருத்துவர்தான். இவரது தாத்தா மருத்துவராக இருந்து ஓய்வு பெற்றபோது அப்போதைய குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி அவருக்கு பாராட்டி கடிதம் எழுதினார். காதம்பரி ஜெத்வானிக்கு நடிக்க ஆர்வம் இருந்ததால் சினிமாவில் நடிக்க முயற்சி செய்தார். தெலுங்கு சினிமாவில் கால் பதித்த அவருக்கு சொல்லிக்கொள்ளும் படியான சூப்பர் ஹிட் படங்கள் எதுவும் அமையவில்லை.

ஹிந்தி, பஞ்சாபி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். தமிழில் இவர் நடித்த படம் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் இவர் கூறியுள்ள புகார் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குறிப்பாக, " ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரின் ஜெகன் மோகன் ரெட்டியின் YSRCP கட்சியை சேர்ந்த குக்கலா வித்யாசாகர் என்பவர் அளித்த பொய் புகாரின் அடிப்படையில் மும்பையில் உள்ள எனது வீட்டிற்கு காவல்துறையினர் வந்தார்கள். வந்தவர்கள் என்னை கடத்தி சென்று ஆந்திராவில் உள்ள அரசினர் மாளிகையில் யாருக்கும் தெரியாமல் அடைத்துவைத்து சித்திரவதை செய்தனர். காவல்துறை அதிகாரிகள் என்னை பலாத்காரம் செய்தனர். இதில் ஐபிஎஸ் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளும் உள்ளனர்.

அதன் பின்னர் என்னை சிறையில் அடைத்தனர். எனது பெற்றோர்களையும் சிறையில் அடைத்தனர். எனது அப்பாவுக்கு இவர்கள் கொடுத்த சித்ரவதையால் அவருக்கு தற்போது காது கேட்கும் திறன் பறிபோனது. இப்போது ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதால் தைரியமாக சொல்கிறேன். அவர்கள் மீது இப்போதைய முதலமைச்சர் தயவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என குறிப்பிட்டிருந்தார்.

இவரது புகாரை அடுத்து, இவர்மீது பதியப்பட்ட வழக்கு குறித்து ஆராய, ஆந்திர அரசு ஸ்ரவந்தி ராய் என்ற ஏ.சி.பியை நியமித்துள்ளது. மேலும் வழக்கு விசாரணை நடிகை காதம்பரி ஜெத்வானிக்கு மனதுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளதால், தனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளார். இது தொடர்பாக ஹைதராபாத் விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை காதம்பரி அழுதுகொண்டே பலருக்கும் நன்றி கூறினார். குறிப்பாக இந்த இக்கட்டான சூழலில் தனக்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி. ஆந்திர மாநில அரசு எனக்கு நீதியை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை உள்ளது. இதுபோல் இனி எந்த பெண்ணுக்கும் நடக்கக்கூடாது என அழுதுகொண்டே பேசினார். இப்போது இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகைக்கு துன்புறுத்தல்... சிக்குவார்களா ஐபிஎஸ் அதிகாரிகள்? - ஆந்திர அரசு  விசாரணை

LATEST News

Trending News