ஒரு மணி நேரம் கூட கொடுக்க முடியாது.. பிரம்மாண்டத்தை தொங்கலில் விட்ட நடிகர்..!
தமிழ் சினிமாவில் பெரும் பட்ஜெட்டில் படம் எடுப்பதற்கு இந்த இயக்குனரை விட்டால் வேறு ஆள் இல்லை என்று கூறலாம். அந்த அளவிற்கு படத்திற்கு பட்ஜெட் குறைவாக இருந்தாலும் கூட அதை அதிகமாக்க கூடியவர் இந்த இயக்குனர். சில படங்களுக்கு பட்ஜெட் அதிகமாக தேவைப்படும்.
அதனால் அதிகமாக செலவு செய்து எடுப்பதை பார்த்திருப்போம். ஆனால் ஒரு சில திரைப்படங்களில் செலவுகள் அதிகமாக இல்லை என்றாலும் கூட இவர் அதிக செலவுகளை இழுத்து விட்டு படத்தின் பட்ஜெட்டை எகிற செய்வதும் உண்டு.
இப்படி சில டாப் ஸ்டார்கள் நடித்த திரைப்படங்களில் எக்கசக்கமாக செலவுகளை இழுத்து விட்டு தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்ட சம்பவங்களும் தமிழ் சினிமாவில் நடந்திருக்கின்றன. அதிலும் படத்திற்கு தேவையே இல்லாமல் பாடல்களுக்கு மட்டும் கோடிகளில் செலவு செய்து அதிர்ச்சியை கொடுக்க கூடியவர் இந்த இயக்குனர்.
இவர் இயக்கிய இரண்டாம் பாகம் ஒன்று தமிழில் வெளியாகி பெரும் தோல்வியை கண்டது. இதனை தொடர்ந்து இந்த இயக்குனரையும் அந்த படத்தில் நடித்த வேர்ல்டு நடிகரையும் பங்கம் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
இதனால் பரபரப்பான நமது அதிக பட்ஜெட் இயக்குனர் மூன்றாம் பாகத்தில் கோட்டை விட்டதை பிடிக்க வேண்டும் என்று களம் இறங்கி இருக்கிறார். எனவே ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் மூன்றாம் பாகத்தை கொஞ்சம் பட்டி ரிங்கிரிங் பார்த்து வைக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறார்.
இதற்காக பத்து நாள் கால் சீட்டு கொடுங்கள் என்று வேர்ல்டு நடிகரிடம் சென்று கேட்டிருக்கிறார் இந்த இயக்குனர். பொதுவாகவே இந்த இயக்குனரிடம் நடிக்க வரும் நடிகர்கள் எவ்வளவு கறக்க முடியுமோ அவ்வளவு பணம் கறந்து விட்டதான் விடுவார்கள்.
இப்பொழுது பத்து நாள் நடிக்க வேண்டும் என்று கேட்டால் சும்மா விடுவாரா அந்த வேர்ல்ட் நடிகர், ஏற்கனவே அவருக்கு ஏக போகமான பட வாய்ப்புகள் இருந்து வருகின்றன. எனவே ஒரு மணி நேரம் கூட சும்மா தர முடியாது பத்து நாள் நடிக்க வேண்டும் என்றால் அதற்கு தனி பேமண்ட் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த இயக்குனர் சரி தயாரிப்பாளர் தான் எவ்வளவு கேட்டாலும் கொடுப்பாரே என்று அவர் பக்கம் முகம் திருப்பி இருக்கிறார். ஆனால் ஆளை விடுங்கடா சாமி என்று கண்ணுக்கு எட்டாத தூரத்தில் ஓடிக்கொண்டிருக்கிறாராம் இந்த படத்தின் தயாரிப்பாளர்.
சினிமாவிலேயே பெரும் பட்ஜெட் படங்களை எடுக்கும் தயாரிப்பாளரையே இப்படி ஓட விட்டுவிட்டோமே என்று ஒரு பக்கம் மனகலககத்துடன் இருக்கிறாராம் இயக்குனர். இந்த நிலையில் மூன்றாவது பாகமாவது தேருமா என்று ஒரு பக்கம் பேச்சுக்களும் இருந்து வருகின்றன.