பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிந்தது.. கடைசி நாள் வீடியோ வெளியிட்ட நடிகர்.
கடந்த சில வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கூட்டு குடும்பம் பற்றிய இந்த கதைக்கு எக்கச்சக்க ரசிகர்களும் இருக்கிறார்கள்.
தற்போது இந்த தொடரில் ஜனார்த்தனன் காயங்கள் உடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை தாக்கியதாக கதிர் மற்றும் ஜீவாவை கைது செய்து இருக்கின்றனர்.
இந்த பிரச்சனையில் இருந்து அவர்கள் எப்படி தப்பிக்க போகிறார்கள் என ரசிகர்களும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் ரோலில் நடித்த சரவணவிக்ரம் இன்று பிக் பாஸ் 7 ஷோவில் போட்டியாளராக சென்றிருக்கிறார்.
'இன்றோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்து நேராக பிக் பாஸ் வீட்டுக்கு போகிறேன்" என அவர் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.