மாலத்தீவில் சன்னிலியோன்: வண்ண வண்ண கிளாமர் புகைப்படங்கள்!

மாலத்தீவில் சன்னிலியோன்: வண்ண வண்ண கிளாமர் புகைப்படங்கள்!

கடந்த சில மாதங்களில் காஜல் அகர்வால் உள்பட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகள் பலர் மாலத்தீவு சென்று வந்தனர் என்பதும் அவர்கள் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த புகைப்படங்கள் வைரலானது என்பதும் தெரிந்ததே.

இன்ஸ்டாகிராமில் மில்லியன் கணக்கில் ஃபாலோயர்கள் வைத்திருப்பவர்களுக்கு மாலத்தீவு சென்றுவர மற்றும் தங்கும் வசதி அனைத்தும் இலவசம் என்று அந்நாட்டின் சுற்றுலாத் துறையை கூறியதை அடுத்து பல நடிகைகள் மாலத்தீவுக்கு சென்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது லேட்டஸ்டாக மாலத்தீவு சென்று இருப்பவர் பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகை சன்னி லியோன். அவர் சமீபத்தில் மாலத்தீவு சென்றுள்ளதை அடுத்து அங்கு எடுக்கப்பட்ட நீச்சலுடை புகைப்படங்கள் உள்பட வண்ண வண்ண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவுசெய்துள்ளார். குறிப்பாக கிளியுடன் அவர் எடுத்துள்ள புகைப்படங்கள் இது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும் 8 லட்சத்துக்கும் அதிகமான லைக்ஸ்களை இந்த புகைப்படங்கள் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழில் சன்னி லியோன் நடித்து வரும் திரைப்படத்திற்கு ’ஓ மை கோஸ்ட்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES