இந்த காட்சி படத்தில் இல்லையா...? திரிஷாவின் பதிவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்..
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான குட் பேட் அக்லி படம் கடந்த 10ம் தேதி வெளியானது. இப்படம் அஜித் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது மற்றும் உலகளவில் இரண்டு நாட்களில் ரூ. 90 கோடி வசூலை அள்ளியுள்ளது.
இந்த படத்தில் த்ரிஷா அஜித்துக்கு ஜோடியாக நடித்திருந்தார் இது விடாமுயற்சி படத்தின் பிறகு இவர்களின் மீண்டும் இணைந்த படம். இருவரின் அருமையான கூட்டணி மீண்டும் ரசிகர்களை மயக்கும் வகையில் இருக்கிறது. இந்த நிலையில் குட் பேட் அக்லி படத்தின் வெற்றியை தொடர்ந்து த்ரிஷா தனது சமூக ஊடகப் பக்கத்தில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் படத்தில் வாராத ஒரு பாடல் காட்சியின் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த காட்சி குட் பேட் அக்லி படத்திலிருந்து டெலிட் செய்யப்பட்ட காட்சி என்பதால் தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இந்த வீடியோவை மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிடும் வகையில் அது சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.