விஜய்யின் அடுத்த கட்ட அரசியல் பயணம்.. நாளை முக்கிய ஆலோசனை..!
நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நாளை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் உடன் அவர் முக்கிய ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய்யின் ரசிகர் மன்றம் விஜய் மக்கள் இயக்கம் தற்போது பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் போட்டியிட்டு 100க்கும் மேற்பட்டவர்கள் வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் அவர் நடத்திய நிலையில் அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நாளை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் சந்திக்க இருப்பதாகவும் பனையூர் இல்லத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அரசியல் பயணம் குறித்த ஆலோசனை செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஜய் ’லியோ’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் ’தளபதி 68’ படத்திற்கு பிறகு மூன்று ஆண்டுகள் திரைப்படம் நடிக்க போவதில்லை என்றும் அரசியலில் முழு அளவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.