நடிகர் அஜித்துக்கு மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை!! ரசிகர்களுக்கு அதிர்ச்சி கூறிய பிரபலம்..

நடிகர் அஜித்துக்கு மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை!! ரசிகர்களுக்கு அதிர்ச்சி கூறிய பிரபலம்..

நடிகர்  அஜித் மனைவி நடிகை ஷாலினிக்கு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில நாட்களுக்கு முன் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. சென்னைக்கு திரும்பிய அஜித், மருத்துவமனையில் மனைவியின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு எடுத்த புகைப்படமும் இணையத்தில் வைரலானது.

கடந்த மார்ச் மாதம் அஜித் மூளைக்கு செல்லும் நரம்பு பகுதியில் இருந்த கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை மேற்கொண்டார். சில நாட்களிலேயே வீட்டிற்கு திரும்பி படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார்.

இந்நிலையில் மனைவியில் அறுவை சிகிச்சை முடிந்த நிலையில், மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை அஜித் செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே செய்த அறுவை சிகிச்சையில் இருந்து முழுமையாக குணமடைய வேண்டும் என்றால் இந்த அறுவை சிகிச்சையும் அஜித் மேற்கொள்ள வேண்டுமாம்.

அதற்காக குட் பேட் அக்லி படத்தின் ஷூட்டிங்கினை முடித்துவிட்டு, அறுவை சிகிச்சை செய்யவுள்ளாராம். அதன்பின் ஒரு வருடம் ஓய்வில் இருப்பதாகவும் பத்திரிக்கையாளர் அந்தணன் தெரிவித்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES