பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல்

Meesaya Murukku 2 Three days box office collection: மீசைய முறுக்கு 2 திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்து அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில், இப்படம் 3 நாட்களில் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது; அதைப்பற்றி பார்க்கலாம்.

 

மீசைய முறுக்கு 2

ஆம்பள திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இதன்பின் தனி ஒருவன், இன்று நேற்று நாளை, அரண்மனை 2 உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். பின்னர், 2017-ஆம் ஆண்டு மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும், இயக்குநராகவும் களமிறங்கினார். தனது வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை அவர் இயக்கியிருந்தார்.

பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல் | Meesaya Murukku 2 Worldwide Box Office Collection

இப்படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், 9 வருடங்களுக்கு பின் மீசைய முறுக்கு 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஆனால், இம்முறை கானா பாடல்களையும், கானா கலைஞர்களின் வாழ்க்கையையும் மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளார். இப்படத்தில் ரம்யா ரங்கநாதன், பாபா பாஸ்கர், கருணாஸ், சைத்ரா, கெத்திகா, நாசர், ஹர்ஷத் கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

 

பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் செய்துள்ள வசூல் | Meesaya Murukku 2 Worldwide Box Office Collection

 

பாக்ஸ் ஆபிஸ்

ஹிப்ஹாப் ஆதியிடம் இருந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான மீசைய முறுக்கு 2 திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், முதல் நாளிலிருந்தே வசூலை அள்ளி வருகிறது. இந்த நிலையில், 3 நாட்களில் மீசைய முறுக்கு 2 திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் 3 நாட்களில் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

LATEST News

Trending News