அன்பில் அவன் திரை விமர்சனம்
கதைக்களம்
அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து சந்தோஷமாக தான் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால், ப்ரீத்தி முகுந்தனுக்கு ஒரு சில ஆசைகள் உள்ளது. அதை எப்படியாவது செய்ய வேண்டும் என இருக்க, அசோக் செல்வனும் அதற்கு தயாராகி மலைப்பகுதியில் ஒரு வீட்டை வாங்குகின்றனர்.

அதன் பிறகு ஒரு சில முக்கிய புள்ளிகளால் பல பிரச்சனைகள் அவர்களை சுற்றுகிறது. அது என்ன பிரச்சனை, எப்படி இதில் இவர்கள் சிக்கினார்கள், அதிலிருந்து எல்லாம் எப்படி மீண்டார்கள், என்பதன் ஆக்ஷன் அதிரடியே அன்பில் அவன் படத்தின் மீதிக்கதை.
படத்தை பற்றிய அலசல்
அசோக் செல்வன் எப்போதும் வித்தியாசமாம கதைகளை தேடி தேடி நடிப்பவர், அப்படி தான் தன் நடிப்பிப் வெளியான போர் தொழில் இயக்குனர் கதையை தேர்ந்தெடுத்துள்ளார், அதில் கச்சிதமாக பொருந்தியும் சென்றுள்ளார்.
அதிலும் ப்ரீத்தியுடனான ரொமான்ஸ் காட்சி அத்தனை அழகாக அமைத்துள்ளனர், அதே போல் இரண்டாம் பாதி ஆக்ஷன் காட்சிகளிலும் பட்டையை கிளப்பியுள்ளார், அந்த ஏரியில் குதிக்கும் காட்சி செம.

ப்ரீத்தி முகுந்தன் இனி இவர் காலம் தான் போல, ப்ளாஸ்ட்-ல் தன் முத்திரையை பதித்த இவர் அடுத்தடுத்து படங்கள் மூலம் இளைஞர்கள் பேவர்ட் ஹீரோயினாகவே மாறிவிட்டார். அதிலும் இதில் அசோக் செல்வனுடனான கெமிஸ்ட்ரி பக்கா. படத்தில் வரும் கதபாத்திரங்களில் இவர்களை தாண்டி ஒரு போலிஸ் கதாபாத்திரம் கவனம் ஈர்க்கிறது, டெல்லி கணேஷ் மகன் தான் அதை செய்துள்ளார், மிக சிறப்பு.
படத்தின் முதல் பாதி காதல் திகட்ட திகட்ட செல்ல, அட செம பீல்குட் மூவி என நினைத்தால் இடைவேளை மொமண்ட் அப்படியே கதையை திருப்பி போடுகிறது, ஆனால் பிரச்சனையே இங்கு தான்.

அதுவரை நன்றாகவே செல்லும் திரைக்கதை, பல முடிச்சுகளை முதல் பாதியில் போடுகிறது, இந்த முடிச்சுக்கள் கேள்விக்கான பதிலை இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம் பெட்டர் ஆகவே அவிழ்த்து இருக்கலாம், ஏதோ மிஸ் ஆன பீல் தருகிறது.
டெக்னிக்கலாக பின்னணி இசை ஓகே ரகம் தான் என்றாலும், ஒளிப்பதிவு அத்தனை அழகு, குறிப்பாக முதல் பாதி அசோக் செல்வன்-ப்ரீத்தி காதல் காட்சிகள்.
க்ளாப்ஸ்
- அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் கெமிஸ்ட்ரி
- படத்தின் முதல் பாதி
- ஆக்ஷன் காட்சிகள்
பல்ப்ஸ்
- இரண்டாம் பாதி இன்னமும் சுவாரஸ்யம் கூட்டியிருக்கலாம்.
மொத்தத்தில் இந்த அன்பில் அவன் நான் கேட்டது இது, ஆனா அவர் கொடுத்தது வேற என்பது போல் ரொமான்ஸ்+ ஆக்ஷன் கலந்துக்கட்டி அடித்துள்ளனர், அது எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றாலும், ஒரு ஒன் டைம் டீசண்ட் வாட்ச் ஆக அமைகிறது.
