பாக்ஸ் ஆபிஸ்: சந்தீப் கிஷனின் சிக்மா திரைப்படம் முதல் நாளில் மட்டுமே செய்துள்ள வசூல்...
சிக்மா படம்
சினிமாவில் களமிறங்கும் ஒவ்வொரு கலைஞர்களுக்கும் அவர்களது முதல் திரைப்படம் மிகவும் ஸ்பெஷல்.
அப்படி தனது தாத்தா, அப்பா சினிமாவில் பெரிய இடத்தில் இருந்தாலும் அவர்களின் உதவியுடன் களமிறங்காமல் தனது சொந்த உழைப்பில் ஜெயிக்க வேண்டும் என போராடியவர்.
லைகா நிறுவனம் தயாரிக்க விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய முதல் திரைப்படம் தான் சிக்மா.
இப்படம் நேற்று அக்டோபர் 2 மாஸாக வெளியாகி இருந்தது. விஜய்யின் ரசிகர்களை தாண்டி ஓட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுமே இந்த இளம் கலைஞருக்கு தங்களது வாழ்த்துக்களை, ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
பாக்ஸ் ஆபிஸ்
ஜேசன் சஞ்சய் இயக்கிய முதல் படத்தை அவரது அம்மா மற்றும் தங்கை முதல் நாளே வந்து FDFS பார்த்தனர்.

அதேபோல் பிரபலங்கள் பலரும் படத்தை பார்த்து பாராட்டினார்கள், விமர்சனங்களும் நல்ல முறையில் தான் வந்துள்ளது. தற்போது ஜேசன் சஞ்சயின் சிக்மா படத்தின் முதல்நாள் கலெக்ஷன் விவரம் வெளியாகியுள்ளது.
இப்படம் முதல் நாள் முடிவில் ரூ. 2.5 கோடிக்கு மேல் வசூல் வேட்டை செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.