குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் போட்டியாளர் வாங்கும் சம்பளம்!! அதுவும் ஒரு நாளைக்கே இவ்வளவா?

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் போட்டியாளர் வாங்கும் சம்பளம்!! அதுவும் ஒரு நாளைக்கே இவ்வளவா?

குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒட்டு மொத்த தமிழ் நெஞ்சங்களின் பேவரட் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. அதோடு குக் வித் கோமாளி 5வது சீசன் தற்போது தொடங்கவுள்ளது. நடுவராக மாதம்பட்டி ரங்கநாஜ் மற்றும் தாமுவும் இருந்து வருகிறார்கள். 

5வது சீசனில் சரத், புகழ், சுனிதா, குரேஷி, ராமர், வினோத், ஷப்னம், கேமி, அன்ஷிதா போன்றவர்கள் கோமாளிகளாகவும் இருந்து வருகிறார்கள்.

போட்டியாளர்களாக பிரியங்கா தேஷ்பாண்டே, சுஜிதா, விடிவி கணேஷ், இர்பான், திவ்யதுரைசாமி, சூப்பர் சிங்கர் பூஜா, பாண்டியன் ஸ்டோர்ஸ் வசந்த் குமார், நடிகை ஷாலின் ஜோயா, அக்ஷய் கமல், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா கலந்து கொண்டு வருகிறார்கள். 

இந்நிலையில், இவர்களின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு என்ற தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

பிரியங்கா தேஷ்பாண்டே 18 ஆயிரம், சுஜிதா 18 ஆயிரம், விடிவி கணேஷ் 15 ஆயிரம், இர்பான் 15 ஆயிரம், திவ்யதுரைசாமி 12 ஆயிரம், சூப்பர் சிங்கர் பூஜா 9 ஆயிரம், பாண்டியன் ஸ்டோர்ஸ் வசந்த் குமார் 10 ஆயிரம், நடிகை ஷாலின் ஜோயா 10 ஆயிரம், அக்ஷய் கமல் 10 ஆயிரம், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா 10 ஆயிரம் சம்பளமாக வாங்கி வருகிறார்கள். 

இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES