அப்படியொரு ரிலேஷன்ஷிப்பில் எனக்கு நடந்தால், அதை தான் செய்வேன்!! நடிகை ஸ்ருதி ஹாசன் சொன்னது இதான்..
உலக நாயகன் கமல் ஹாசன் மகளாக உன்னை போல் ஒருவன் படத்தில் வானம் எல்லை என்ற பாடல் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இப்பாடலை தொடர்ந்து 7 ஆம் அறிவு மற்றும் 3 போன்ற படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமாகினார். இப்படத்தினை தொடர்ந்து, அஜித், விஜய், சூர்யா, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வந்தார். இதன்பின் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஸ்ருதி, சாந்தனு என்பவரை காதலித்து லிவ்விங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்தார்.
ஒரே வீட்டில் வாழ்ந்து இணைந்து எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து வந்த நிலையில், தன் காதலர் சாந்தனுவின் புகைப்படங்களை டெலீட் செய்திருக்கிறார் ஸ்ருதி. காதலரை பிரேக்கப் செய்துவிட்டார் என்று பலர் கூறி வந்த நிலையில், ஸ்ருதி ஹாசன் காதல் பற்றி பேசிய ஒரு விசயம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அதாவது சில ஆண்டுகளுக்கு முன் அவர் அளித்த பேட்டியொன்றில், தனக்கான துணை எப்படி வேண்டும், ரிலேஷன்ஷிப்னா இப்படி தான் இருக்கனும் என்று பேசியிருக்கிறார்.
அதில், ரிலேஷன்ஷிப் நன்றாக போகவேண்டும் என்றால் தன்னுடைய துணை சோசியலாக பழகனும், உண்மையாக இருக்கனும் என்றும் கூறியிருக்கிறார். மேலும், நம்மை சுதந்திரமாக இருக்கவிட வேண்டும். நீ எங்க போற, எங்க வர, என்ன பண்ற போன்ற விசயங்கள் தலையிடக்கூடாது. அப்படி எனக்கு நடந்தால், கண்டிப்பாக அந்த ரிலேஷன்ஷிப்பில் நான் இருக்கமாட்டேன், விலகிவிடுவேன் என்று ஸ்ருதி ஹாசன் சொன்ன வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இருவரும் நல்ல உறவில் இருந்த நிலையில், பிரிவுக்கான காரணம் என்ன என்று பாலிவுட் ஊடகங்கள் சில கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அது லோகேஷ் கனகராஜுடன் நடித்த இனிமேல் ஆல்பத்தில் அவருடன் ஸ்ருதி ஹாசன் நெருக்கமாக இருந்தது தான் சாந்தனுவுக்கும் ஸ்ருதி ஹாசனுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட காரணம் தான் பிரிவு என்றும் கூறப்படுகிறது.
இதற்கு முன் ஸ்ருதி ஹாசன் கிளாமர் காட்சிகளில் நடித்திருந்தும் அப்போது வராத கருத்து வேறுபாடு இப்போது எப்படி வந்தது என்றும் வேறு ஏதோ ஒன்று சாரியாக படவில்லை என்பதால் தான் பிரேக்கப் செய்திருக்கிறார்கள் என்று பலர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.