அந்தமாதிரி சீன்லாம் இருக்கு..அவருடன் நடிக்கும் போது அப்படித்தான் இருந்துச்சு!! நடிகை காயத்ரி ஷான்..
JSK பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பு நிறுவனர் ஜேஎஸ்கே சதீஷ் குமார் இயக்கத்தில் பிக்பாஸ் பிரபலங்கள் பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், நடிகை சாந்தினி, காயத்ரி ஷான் உள்ளிட்ட பலர் நடிப்பில் FIRE என்ற படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தின் டிரைலரில் எல்லைமீறிய நெருக்கமான காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. FIRE படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் போது அப்படத்தில் நடித்த நடிகை காயத்ரி ஷான் எதற்கு நடித்தேன் என்ற விளக்கம் கொடுத்துள்ளார்.
சதீஷ் சார் முதலில் கதையை சொல்லும் போது யோசித்தேன். அடல்ட் கதையாக இருக்கிறதே என்று யோசித்து கதை முழுமையாக கேட்டப்பின் நடிக்க ஓகே சொன்னேன். இப்படத்தை அனைத்து பெண்களும் பார்க்க வேண்டும். ஷூட்டிங் ஸ்பாட்டில் எனக்கு பாதுகாப்பாக இயக்குநரும் ஹீரோ பாலாஜியும் இருந்தார்.
ஆரம்பத்தில் பாலா ஹீரோன்னு சொன்னதும், ரொம்ப கராராக இருப்பாரே, பிக்பாஸில் சேர் எல்லாம் தூக்கிப்போட்டாரே என்று பயந்தேன். ஆனால் அந்தமாதிரி எல்லாம் பாலா இல்லை. இந்த படத்தில் ஒருசில நெருக்கமான காட்சிகள் இருக்கும்.
அந்த காட்சிகளில் நடிக்க பாலா என்னை கம்ஃபோட்டாக வைத்துக்கொண்டார், படத்தை டெலிகிராம் மூலமாக பார்க்காமல் தியேட்டருக்கு வந்து பாருங்கள் என்றும் காயத்ரி ஷான் தெரிவித்துள்ளார்.