கொரோனா இரண்டாவது அலையால் OTT-க்கு தள்ளப்படும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள்!
தமிழகம் மட்டுமின்றி இந்தியளவில் கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதனால் தற்போது ஒட்டுமொத்த மக்களும் ஸ்தம்பித்து போய் உள்ளனர்.
மேலும் சினிமா துறையும் மீண்டும் OTT தளத்தில் திரைப்படங்களை வெளியிடும் நிலைக்கு வந்துள்ளனர். ஆம், திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்த்து வந்த முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் தற்போது OTT தளத்தில் வெளியாகவுள்ளது.
அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதியின் துக்லக் தர்பார் திரைப்படம் ஹாட் ஸ்டாரில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோல நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படம் தற்போது நேரடியாக ஹாட்ஸ்டார் அல்லது நெட்ப்ளிக்ஸ் வலைதளத்தில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் தமிழகத்தில் இன்னும் சில ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிக்கும் பட்சத்தில் OTT-யில் வெளியாகும் திரைப்படங்கள் குறித்த பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும் என கூறப்படுகிறது.