ஸ்ருதிஹாசனின் நான்காவது காதலன் இவரா..
உலக நாயகன் கமலஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவரும் தன் தந்தையைப் போலவே பன்முக திறமையை கொண்டவர்.
திரை உலகில் ஆரம்ப நாட்களில் பின்னணி பாடகியாக அறிமுகமான இவர் தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழி படங்களில் நடித்து அசத்தியவர்.
ஸ்ருதிஹாசன் தனது ஆறாவது வயதில் தேவர் மகன் படத்திற்காக முதல் முதலாக பாடலை பாடிய பிறகு சாட்சி 420 என்ற ஹிந்தி திரைப்படத்திலும், ஹேராம், என் மன வானில், வாரணம் ஆயிரம், உன்னை போல ஒருவன் போன்ற படங்களில் பின்னணி பாடகியாக விளங்கினார்.
இதனை அடுத்து 2011-ஆம் ஆண்டு ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடிகர் சூர்யாவோடு இணைந்து நடித்த இவர் சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான விருதினை பெற்றவர்.
இதனை அடுத்து 2014-இல் பூஜை படத்தில் நடித்த இவர் 2015-இல் புலி, வேதாளம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து 2016-ல் தமிழ் திரைப்படங்கள் ஏதும் கிடைக்காத நிலையில் அக்கட தேசத்திற்கு சென்று தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இந்நிலையில் சுருதிஹாசன் தனது காதலர் சாந்தனு ஹசாரிகா லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து வந்தது அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். அவரோடு வாழ்ந்த தருணங்களை போட்டோக்களாகவும், வீடியோக்களாகவும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வந்த நிலையில் தற்போது அந்த போட்டோக்கள் அனைத்தையும் டெலிட் செய்து இருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் இருவரும் ஒருவரை ஒருவர் Instagram பக்கத்தில் அன்ஃபாலோ செய்து இருக்கிறார்கள். இதனால் ஸ்ருதிஹாசன் மற்றும் சாந்துனு இருவருக்கும் இடையே உள்ள உறவு பிரேக்கப் ஆகிவிட்டதாகவும் எனவே தான் இது போல செய்திருப்பதாகவும் விஷயங்கள் கசிந்த வண்ணம் உள்ளது.
அது மட்டுமல்லாமல் கடந்த ஒரு மாத காலமாகவே அவர்கள் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும் பொது இடத்திற்கும் தனித் தனியாக தான் வருவதாகவும் திரைத்துறை வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளது.
இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்து விட்ட நிலையில் Instagram பக்கத்தில் இருந்தும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீக்கியதால் ஸ்ருதியின் மூன்றாவது காதலும் பிரேக்கப் ஆகி விட்ட நிலையில் நான்காவது காதலன் யார் என்ற கேள்வியை எழுப்பி கலாய்த்து வருகிறார்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் லண்டனை சேர்ந்த மைக்கேல் கோர்ஸ்லியை காதலித்து வந்த ஸ்ருதிஹாசன் 2019-ஆம் ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்த நிலையில் சில மாதங்கள் அது நிமித்தமான பல அழுத்தத்தில் இருந்தார்.
இதனை அடுத்து தற்போது மூன்றாவது பிரேக்கப் ஆகி விட்ட நிலையில் அது குறித்த அதிகாரப்பூர்வமான விளக்கத்தை ஸ்ருதிஹாசன் விரைவில் தருவார் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
தற்போது எந்த விஷயம் தான் இணையத்தில் வேகமாக கசிந்து வருவதோடு மட்டுமல்லாமல் ஸ்ருதிஹாசனின் மூன்றாவது காதலும் பிரேக்கப் போன நிலையில் நான்காவது காதலன் யார் தெரியுமா? என்ற ரீதியில் ரசிகர்கள் அவர்களுக்குள் பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.
இதனை அடுத்து இந்த விஷயம் வைரலானதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளதால் விரைவில் இதற்கான விளக்கத்தை ஸ்ருதிஹாசன் கொடுத்தால் மட்டும் தான் இந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.