சிந்தாமணி சொன்ன ஐடியா, சிக்கலில் சிக்கிய விஜயா, என்ன இப்படி செய்துவிட்டார்... சிறகடிக்க ஆசை சீரியல்

சிந்தாமணி சொன்ன ஐடியா, சிக்கலில் சிக்கிய விஜயா, என்ன இப்படி செய்துவிட்டார்... சிறகடிக்க ஆசை சீரியல்

சிறகடிக்க ஆசை

விஜய் தொலைக்காட்சியில் அட இந்த விஷயத்தை முடிங்கப்பா என வெறுக்கும் அளவிற்கு ஒரு விஷயத்தை வைத்து இழு இழு என இழுத்துக்கொண்டே வருகிறார்கள் சிறகடிக்க ஆசை சீரியல் டீம்.

ரோஹினி பற்றிய உண்மை தெரிந்ததும் கதை அடுத்தக்கட்டத்திற்கு நகரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் கதையில் விவாகரத்து பெற வேண்டும் என மனோஜ்-விஜயா ஒரு பிளான் போடுவதும், விவாகரத்து கொடுக்க கூடாது என ரோஹினி இன்னொரு பக்கம் பிளான் போடுவதுமாகவே கதை நகர்கிறது.

இவர்களை ஆட்டி வைக்கும் பொம்மையாக சிந்தாமணி நடுவில் ஏகப்பட்ட சூழ்ச்சிகளை செய்து வருகிறார்.

எபிசோட்

இன்றைய எபிசோடில், விஜயா-மனோஜ் தன்னை தாக்கியதால் ரோஹினி மாதர் சங்கத்தில் புகார் அளிக்க அவர்களது சங்கத்தில் இருந்து ஒருவர் அண்ணாமலை வீட்டிற்கு வருகிறார்.

அவர் விஜயா செய்த விஷயத்தை கூறி கோபமாக பேசுகிறார், இதனை நான் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கிறேன் என்கிறார். விஜயாவும் தான் செய்த விஷயத்தை அண்ணாமலையிடம் கூற அவரோ கோபப்பட்டு திட்டுகிறார்.

ஆனால் விஜயா அவள் விஷயத்தை நான் பார்த்துக்கொள்கிறேன் என சென்றுவிடுகிறார். சிந்தாமணி அந்த மாதர் சங்க பெண்ணை பார்த்து ரோஹினிக்கு ஆதரவாக பேசாதீர்கள் என பேசிப்பார்க்க கூறுகிறார், இல்லையென்றால் லஞ்சம் கொடுக்க கூறுகிறார்.

உடனே விஜயா, ஸ்ருதி ரெஸ்டாரன்ட் வந்து அந்த மாதர் சங்க நபரை காண்கிறார், அவரிடம் பேசிப்பார்க்கிறார். ஆனால் அவர் கேட்பதாக தெரியவில்லை, இதனால் விஜயா சிந்தாமணி கூறியது போல் பணம் கொடுக்கிறார், அதனை அவர் வீடியோ எடுத்துவிடுகிறார்.

இந்த பண விஷயத்தில் கண்டிப்பாக விஜயா ஜெயிலுக்கு செல்வது உறுதி என்பது தெளிவாக தெரிகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES