நடிகை பிரியா பவானி ஷங்கர் முழு சொத்து மதிப்பு எவ்வளவுன்னு தெரியுமா..

நடிகை பிரியா பவானி ஷங்கர் முழு சொத்து மதிப்பு எவ்வளவுன்னு தெரியுமா..

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு சென்று ஜொலித்த நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அந்த வகையில் வாணி போஜனை அடுத்து நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்போது வெள்ளித்திரைகளில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து இருக்கிறார்.


தமிழில் ரத்தினகுமார் இயக்கத்தில் வெளி வந்த மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாகி இன்று வெள்ளித்திரையில் ஜொலித்து பல படங்களை கைவசம் வைத்துக் கொண்டிருக்கிறார்.

பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் வெளி வந்த படங்கள் அனைத்தும் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்ததோடு நல்ல ரிச்சை ரசிகர்களின் மத்தியில் கொடுத்தது. அந்த வகையில் மான்ஸ்டர், யானை, கடைக்குட்டி சிங்கம், பத்து தல என பல பிரபலங்களோடு இணைந்து நடித்திருக்கிறார்.

மேலும் இந்தியன் 2, ரத்னம் டிமான்டி காலனி போன்ற திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வரக்கூடிய நிலையில் தற்போது படப்பிடிப்புகள் படு வேகமாக நடைபெற்று வருகிறது.

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் அடிக்கடி instagram பக்கத்தில் எனது காதலனோடு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் புகைச்சலை ஏற்படுத்தி விடுவார்.


இந்நிலையில் தன் காதலனோடு நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவதை அடுத்து திருமணம் எப்போது என்ற கேள்வி தற்போது இணையங்களில் வலுத்து வருகிறது. ஆனால் இது குறித்து எந்த விதமான தகவலையும் அவர் வெளியிட்டதில்லை.

லிவிங் டுகதர் முறையில் வாழ்ந்து வரும் இவர்கள் சினிமாவில் ஒரு நல்ல நிலையை எட்டிப் பிடித்த பிறகு தான் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.


இதனை அடுத்து பிரியா பவானி ஷங்கரின் முழு சொத்து மதிப்பு குறித்து சில விஷயங்கள் வெளி வந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து விட்டது. இளைஞர்களின் மனதை கொள்ளை அடித்த நடிகை பிரியா ஷங்கரின் மொத்த சொத்து மதிப்பு 8 கோடி முதல் 10 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் இவர் ஒரு படத்தில் நடிப்பதற்கு 20 முதல் 30 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறார். கடந்த ஆண்டு தான் கடற்கரை ஓரமாக புதிய வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார். அத்தோடு இவரிடம் 50 லட்சம் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ் ஒன் கார் மற்றும் காண்டோ கார் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த விஷயத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் பிரியா பவானி சங்கருக்கு இவ்வளவு சொத்து இருக்கா? அடேங்கப்பா.. என்று வாய் பிளந்து விட்டிருப்பது மட்டுமல்லாமல் தங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள். இதனை அடுத்து இந்த விஷயம் தற்போது வைரலாகி உள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES