19 வயசுன்னு கூட பாக்காம படுக்கைக்கு அழைத்தார்.. பிக்பாஸ் நடிகை பகீர் புகார்..!

19 வயசுன்னு கூட பாக்காம படுக்கைக்கு அழைத்தார்.. பிக்பாஸ் நடிகை பகீர் புகார்..!

தென்னிந்திய சினிமாவிலேயே அட்ஜஸ்மெண்டுகள் பற்றி அரசல் புரசலாக அவ்வப்போது என்று இல்லாமல் தினம் தோறும் வகை வகையாக அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய விவரங்கள் வெளிவரக்கூடிய வேளையில் மும்பையில் இருக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.


அங்கு இந்த தொல்லை அதிகளவு உள்ளதாக பிரபலமான நடிகைகள் முதற்கொண்டு நடிகர்கள் வரை வெளிப்படையாக பேசி அதை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற பேச்சுக்களில் தீவிரமாக இருக்கிறார்கள்.

இந்நிலையில் மறைந்த முன்னாள் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் எக்ஸ் காதலியான அங்கீதா லோகாண்டே தனக்கு பாலிவுட் திரைப்படங்களில் நடிக்கும் போது ஏற்பட்ட சங்கடகரமான வேதனைக்கு உரிய அட்ஜஸ்ட்மென்ட் அனுபவத்தை சமீபத்து பேட்டியில் பேசி ரசிகர்களை உறைய வைத்திருக்கிறார்.

அங்கிதா லோகாண்டேவிற்கு தற்போது 39 வயதாகிறது. இவர் 1984 ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் இருக்கும் இந்தூரில் பிறந்து வளர்ந்தவர். இவர் பவித்ர ரிஷிடா எனும் தொடரில் இணைந்து நடிக்கும் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு மானசீகமாக காதலித்து வந்தார்கள்.

இவர்கள் காதலித்தோடு மட்டுமல்லாமல் 2010 ஆம் ஆண்டு முதல் டேட்டிங் செய்ய ஆரம்பித்ததை இருவரும் 2016 இல் பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி அனைவருக்கும் ஆச்சரியத்தை தந்தார்கள்.


அடுத்து விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பேச்சுக்கள் எழுந்த நிலையில் என்ன காரணம் என்று தெரியாமல் இருவரும் பிரேக் அப் செய்து பிரிந்து விட்டார்கள். இதனை அடுத்து சுஷாந்த் சிங் மரண செய்தியை கேட்டு மனம் வருதி அங்கிதாவும் சில போஸ்டர்கள் பதிவிட்டு இருந்தது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

இவரிடம் அண்மையில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது அந்த கேள்வியில் அதிக அளவில் பாலிவுட் படங்களில் நடிக்காமல் டிவி சீரியல்கள் மற்றும் விளையாட்டு ஷோகளில் நடிப்பது ஏன் என்ற கேள்வி தான் அது.

இதற்கு அவர் பதில் அளித்த போது டிவி சீரியலுக்கு வருவதற்கு முன்பே சினிமாவில் நடிக்க வாய்ப்புகளை தேடியதாகவும் அதனை அடுத்து ஒரு ஆடிசனுக்கு சென்றதாகவும் கூறியவர் அந்த அடிஷனில் தன்னுடன் வந்த நபரை வெளியே நிற்க சொல்லிவிட்டு தன்னை மட்டும் அழைத்து உள்ளே சென்று அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசினார்கள் என்ற பகீர் தகவலை கூறி இருக்கிறார்.

இதனை அடுத்து தனக்கு வெறும் 19 வயது என்று கூட பாராமல் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசியவர்களை பற்றி கூறியதோடு திறமையால் படத்தில் நடிக்கலாம் என்று நினைத்த எனக்கு இப்படி செய்து நடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லாததால் சின்னத்திரை பக்கம் வந்துவிட்டதாக கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து பிக் பாஸ் சீசன் 17 போட்டியாளராக கலந்து கொண்ட அங்கிதா லோகாண்டே இந்த போட்டியில் இரண்டாவது ரன்னராக வெளியேறினார். இவர் ஆரம்ப காலத்தில் டிவி சீரியல்களில் நடித்து வந்த கங்கணாவின் மணிகர்ணிகா படத்தில் நடித்திருக்கிறார். மேலும் பாகி 3 படத்திலும் நடித்து அசத்தியவர்.

சினிமா வாய்ப்பை பெற வேண்டுமென்றால் தயாரிப்பாளர், இயக்குனர் ஹீரோ என அனைவரோடும் கண்டிப்பாக அட்ஜஸ்ட் செய்ய அட்ஜஸ்ட்மென்ட் செய்தால் கூடுதலாக பணமும் கிடைக்கும் என்ற நிலையை அறிந்து வேதனைப்பட்ட இவர் தயாரிப்பாளருக்கு படுக்க ஒரு பெண் வேண்டுமென்றால் என்னை விட்டுடுங்க.. என்று கடுமையாக திட்டிவிட்டு திரைப்படங்களில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்து விட்டதாக கூறிய விஷயம் இப்போது வைரலாக இணையங்களில் பரவி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES