வெளியேறிய வனிதாவை மீண்டும் சீண்டிய போட்டியாளர்: ரம்யாகிருஷ்ணனின் வேற லெவல் ரியாக்ஷன்
பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய வனிதாவை போட்டியாளர் ஒருவர் மறுபடியும் கிண்டல் செய்து பேசியதை அவதானித்த ரம்யாகிருஷ்ணன் மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்ற காட்சி ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் வனிதாவால் வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தி மீண்டும் உள்ளே வந்து சில போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதில் அறந்தாங்கி நிஷாவிடம் சுரேஷ் கேள்வி எழுப்பி, அவர் கொடுத்த பதில் தனக்கு திருப்திகரமாக இல்லை என்று கூறியுள்ளார்.
இதற்கு நிஷா, சுரேஷிடம் உங்களது பார்டனரையே சமாதானம் செய்ய முடியவில்லை என்று அளித்துள்ள பதிலால் ஒட்டுமொத்த அரங்கமும் சிரிப்பலையில் மூழ்கியது.
அதுமட்டுமின்றி இதனைக் கேட்ட ரம்யாகிருஷ்ணன் மகழ்ச்சியின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.