நயன்தாரா படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ்சிவன்!

நயன்தாரா படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ்சிவன்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துவரும் திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்றை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்ததை அடுத்து அந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது

நடிகை நயன்தாரா நடித்துவரும் திரைப்படங்களில் ஒன்று ’நெற்றிக்கண்’. இந்த படத்தை விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் இந்த படத்தை மிலிந்த் ராவ் என்பவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏற்கனவே ’அவள்’ உள்பட ஒருசில படங்களை இயக்கியுள்ளார் என்பது தெரிந்ததே.

இந்நிலையில் ’நெற்றிக்கண்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கியுள்ளன. இதனை அடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளத்தில் ’நெற்றிக்கண்’ படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று விரைவில் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார்/

’இதுவும் கடந்து போகும்’ என்று தொடங்கும் இந்த பாடல் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைப்பில் சித்ஸ்ரீராம் அவர்களால் பாடப்பட்டது என்றும் அவர் அறிவித்துள்ளார். இந்த பாடல் வெளியாகும் தேதியை நயன்தாராவின் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News