கூவத்தூரில் நடந்தது என்ன.. எந்தெந்த நடிகைகள் வந்தார்கள்.. உண்மையை உடைத்த புகழேந்தி…
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, அண்மையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் அளித்த பேட்டியில், கடந்த 2017ஆம் ஆண்டு கூவத்தூர் தனியார் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியிருந்தபோது,
நடிகைகள் அழைத்து வரப்பட்டதாகக் கூறியதுடன், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷாவின் பெயரையும் வெளிப்படையாக குறிப்பிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த பிரச்சனைக்கு இயக்குநர் சேரன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த பிரச்சனை குறித்து கொதித்தெழுந்த நடிகை திரிஷா தனது எக்ஸ் தளத்தில்,, “கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மற்றும் கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பானது.
தேவையான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன். இனிமேல் சொல்ல வேண்டிய மற்றும் செய்ய வேண்டிய அனைத்தும் எனது சட்டத் துறை செய்யும்” என்று காட்டமாக கூறியிருந்தார்.
இதையடுத்து ஒரு வார காலமாகவே கூவத்தூர் விவகாரம் சமூகவலைத்தளங்களில் எங்கும் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது இது குறித்த உண்மையை உடைத்துள்ளார் அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி. அவர் கூறியுள்ளதாவது.
சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த கூவத்தூர் விடுதிக்கு நடிகைகள் வந்தார்கள் என்ற தகவல்கள் வெளியாகி கொண்டு இருக்கிறது. குறிப்பாக நடிகை திரிஷா பணம் பெற்றுக் கொண்டு கூவத்தூர் விடுதிக்கு வந்து சென்றார் என்றெல்லாம் பேசுகிறார்கள்.
அந்த சம்பவம் நடக்கும்போது நானும் அங்க தான் இருந்தேன். அந்த ரிசார்ட்டை சுற்றியும் எப்படிப்பட்ட பாதுகாப்பு இருந்தது என உங்கள் அனைவருக்கும் தெரியும். அதைத் தாண்டி எப்படி நடிகைகள் உள்ளே வந்து சென்றிருக்க முடியும்..?
புரட்சிதலைவி அம்மா ஜெயலலிதா அவர்களும் ஒரு நடிகை தான். அவர் திரை உலகில் இருந்த நடிகைகளுக்கு எப்படி ஒரு பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்கி வைத்திருந்தார். ஆனால், தற்போது இருக்கும் நபர்கள் ஏதோ கிள்ளுக்கீரை போல நடிகைகள் பெயரை கொச்சைப் படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த பிரச்சினையை எடப்பாடி சரியாக கையாண்டு இருக்க வேண்டும் அவர் தவறிவிட்டார். அதனால் தான் இப்படி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் பொழுது எந்தெந்த நடிகைகள் கூவத்தூருக்கு வந்தார்கள் என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வது? அங்கு நடிகை மட்டுமல்ல வேறு யாருமே வெளியாட்கள் யாருமே உள்ளே வரவில்லை என்பது தான் உண்மை என பேசி இருக்கிறார் அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி அவர்கள்.