கணவரை பிரிய காரணம் இது தான்..புட்டு புட்டு வைத்த நடிகை சமந்தா.

கணவரை பிரிய காரணம் இது தான்..புட்டு புட்டு வைத்த நடிகை சமந்தா.

நடிகை சமந்தா தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு அழகான இளம் நடிகை. தமிழில் முன்னணி நாயகர்களுடன் அவர் நடித்த பல படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கின்றன.

கத்தி, மெர்சல், தெறி என 3 படங்களில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக சமந்தாநடித்திருந்தார். இந்த 3 படங்களுமே பெரிய அளவில் வெற்றி பெற்றன.

தொடர்ந்து தனுஷூடன் தங்கமகன், விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல், சிவகார்த்திகேயனுடன் சீமராஜா, சூர்யாவுடன் அஞ்சான், 24, ஜீவாவுடன் நீதானே என் பொன்வசந்தம் என பல படங்களில் சமந்தா நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

குறிப்பாக புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா, ஊகூம் சொல்றியா மாமா பாடலில் ஐட்டம் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கிறங்கடித்தார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சமந்தா, கடந்த 2017ம் ஆண்டில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். நாக சைதன்யா, நாகார்ஜூனா – அமலா தம்பதி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 4 ஆண்டுகளே சமந்தா – நாக சைதன்யா குடும்ப வாழ்க்கை நீடித்த நிலையில், 2021ம் ஆண்டில் இருவரும் பிரிந்துவிட்டனர். சட்டப்படியாக விவாகரத்தும் பெற்று விட்டனர்.

அதன்பிறகு சினிமாவில் பிஸியாக நடித்து வந்த சமந்தாவுக்கு, மயோசிடிஸ் என்ற தோல் அலர்ஜி நோய் ஏற்பட்டு, கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டார்.

வெளிநாடுகளுக்கு சென்றும், வீட்டில் இருந்தபடியும் பலவிதமான சிகிச்சை எடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக அந்த நோயில் இருந்து மீண்டு வருகிறார்.

எனினும் அவ்வப்போது படங்களில் கமிட் ஆகி, நடிக்கவும் செய்கிறார். இப்போது சிட்டாடல் என்ற வெப் சீரிஸ் ஒன்றில் சமந்தா நடித்துக்கொண்டு இருக்கிறார்.

தனது வாழ்க்கை குறித்து அவ்வப்போது வீடியோ வெளியிடுவது, நேர்காணலில் பேசுவது சமந்தாவின் வழக்கமாக இருந்து வருகிறது.

குறிப்பாக தனது திருமண வாழ்க்கை, கணவர் பிரிவு குறித்து சமீபத்தில் நடிகை சமந்தா மனம் திறந்து பேசியிக்கிறார்.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் நடிகை சமந்தா பேசியிருக்கிறார். அப்போது தனது திருமண வாழ்க்கையில் கணவரை பிரிய காரணம் இதுதான் என்பதை மிக தெளிவாக கூறியிருக்கிறார்.

பொருளாதார ரீதியாக கணவரை சார்ந்து பெண்கள் இருப்பதில்லை. தங்களது தேவையை அவர்களே பார்த்துக்கொள்கிறார்கள். முக்கியமாக தாங்களே சம்பாதித்து ஆண்களுக்கு ஈடாக தங்களது பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள்.

கணவர்கள், தங்களது மனைவிகளுக்கு சம உரிமையை கொடுக்க வேண்டும். அவர்களிடம் நண்பர்கள் போல பழக வேண்டும். பெண்களை அடிமைப்படுத்த கூடாது.

ஆனால் ஆண்கள் அப்படி நடந்து கொள்ளும் போதுதான் அந்த திருமண உறவு கஷ்டமாகி விடுகிறது. வேறு வழியே இல்லாமல் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது என நடிகை சமந்தா கூறியிருப்பது இப்போது வைரலாகி வருகிறது.

என்னுடைய கணவரை பிரிய காரணம், என்னை அவர் அடிமையாக நடத்தியதுதான் என்று புட்டு புட்டு வைத்திருக்கிறார் நடிகை சமந்தா.

LATEST News

Trending News

HOT GALLERIES