நான் அம்மாவா இருக்கிறதால.. நயனுக்கும் குழந்தைளுக்கும் சம்பந்தம் இல்லையா.. விக்கி மட்டும் தான் அப்பாவா..

நான் அம்மாவா இருக்கிறதால.. நயனுக்கும் குழந்தைளுக்கும் சம்பந்தம் இல்லையா.. விக்கி மட்டும் தான் அப்பாவா..

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார். இதுவரை 75 படங்களில் நடித்துள்ள நயன்தாரா, இப்போது மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்திலும் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

நயன்தாரா நடிக்க வந்த புதிதில், வல்லவன் படத்தில் நடித்த போது நடிகர் சிலம்பரசனுடன் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் உதட்டு முத்தக்காட்சி புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்நிலையில் திடீரென சிம்புவை விட்டுப் பிரிந்த நயன்தாரா, சில ஆண்டுகளுக்கு நடிகர் பிரபுதேவாவை காதலிப்பதாக தகவல் பரவியது. இருவரும் ஒன்றாக சில நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட புகைப்படங்களும் வெளியாகின.

ஆனால் அவருடனும் சில ஆண்டுகள் பழகிய நிலையில், நயன்தாராவுக்கும் அவருக்கும் பிரேக்கப் ஆகி விட்டது. பிரபுதேவா, அவரது மனைவியை பிரிந்த நிலையில், நயன்தாரா பிரபுதேவாவை திருமணம் செய்துக் கொள்ள விரும்பினார்.

ஆனால் என்னுடன் எப்போதும் இரு, ஆனால் திருமணம் மட்டும் வேண்டாம் என மறுத்துவிட்டதால் அவரை விட்டுப் பிரிந்தார் நயன்தாரா.

இதையடுத்து நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரா நடித்தார். அந்த படத்தின் நாயகன் விஜய் சேதுபதி. இந்த படம் வெற்றி பெற்றது. இந்த படத்தின் டைரக்டர் விக்னேஷ் சிவனுக்கும் – நயன்தாராவுக்கும் நெருக்கமான காதல் ஏற்பட்டது.

ஏழு ஆண்டுகள் ஒன்றாக சுற்றித் திரிந்த அவர்கள், கடந்த ஆண்டில் திருமணம் செய்துக்கொண்டனர். திருமணமான சில மாதங்களில், வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர்.

வாடகைத்தாய் மூலம் குழந்தைகள் பெற்றதில், முறையான விதிமுறைகள் கடைபிடிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இந் நிலையில், அனைத்தும் முறையாக நடந்திருப்பதாக, உரிய ஆவணங்கள் இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்த நிலையில் அந்த பிரச்னை சுமூகமாக முடிந்தது.

இதையடுத்து குழந்தைகளுக்கு உலகம், உயிர் என பெயர் வைத்துள்ள விக்கி – நயன் தம்பதி, குழந்தைகளுடன் தங்களது புகைப்படங்களை வௌியிட்டு வருகின்றனர். சமூக வலைதளங்களில் அவை வைரலாகி வருகின்றன.

இதற்கிடையே, அந்த இரட்டை குழந்தைகளை வயிற்றில் சுமந்த வகையில் ரத்த உறவு வகையில், அந்த குழந்தைகளின் உண்மையான தாய், அவரை வயிற்றில் சுமந்தவர்தான். நயன்தாரா கிடையாது என டாக்டர் ஒருவர் கூறியதாக வைரலாகி வருகிறது.

வாடகைத்தாய் அம்மாவாக இருக்கிறதால்,. நயனுக்கும் குழந்தைளுக்கும் சம்பந்தம் இல்லை, விக்கி மட்டும் தான் அப்பா என்ற இந்த விமர்சனம் தற்போது வைரலாகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES