எனக்கு நீ தான் மாப்பிள்ளை.. பிரபல தமிழ் நடிகரிடம் கூறிய கீர்த்தி சுரேஷ் அம்மா..! யார் தெரியுமா..

எனக்கு நீ தான் மாப்பிள்ளை.. பிரபல தமிழ் நடிகரிடம் கூறிய கீர்த்தி சுரேஷ் அம்மா..! யார் தெரியுமா..

ஆரம்ப நாட்களில் மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்யப்பட்ட நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மா ஒரு மலையாள திரைப்பட நடிகை, அவரது அப்பா பிரபல சினிமா பட தயாரிப்பாளராக திகழ்ந்தவர்.

எனவே திரைத்துறையில் நடிக்க வருவதற்கு இவருக்கு எந்தவிதமான இடர்களோ, சங்கடமோ ஏற்படவில்லை. வாரிசு நடிகையாக களம் இறங்கிய இவர் இன்று தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்திருக்கிறார். இவர் தமிழில் மாமன்னன் என்ற திரைப்படத்தில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலினோடு இணைந்து நடித்திருக்கிறார்.


இதனை அடுத்து தற்போது அட்லி தயாரிப்பில் வருண் தவாணுக்கு ஜோடியாக பாலிவுட்டில் உருவாகி வரும் பேபி ஜான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் தமிழில் விஜய் நடித்து வெளி வந்த தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் தான் இது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி அவ்வப்போது வதந்திகள் வெளி வருவது அதிகரித்து விட்டது. தளபதி விஜய் உடன் கிசுகிசுக்கப்பட்ட இவர் பிரபல தொழில் அதிபரோடு நிச்சயதார்த்தம் முடித்துவிட்டார் என்ற விஷயங்கள் வெளி வந்தது.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய் நடிப்பில் வெளி வந்த பைரவா திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் சதீஷும் நடித்திருந்தது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். படத்தின் பூஜை முடிந்த பிறகு கீர்த்தி சுரேஷ் மற்றும் சதீஷ்க்கு மாலை போட்டு இருந்தார்கள்.


அவர்கள் மாலையும் கையுமாக தனியாக நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரகசியமாக திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகள் என்ற பெயரில் கிசுகிசுக்கள் வெளியாகியது.

காமெடி நடிகரான சதிஷ் சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல், மான் கராத்தே, மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனம் விரும்பும் காமெடியனாக மாறி இருக்கிறார். எப்படி நடிகர் பரோட்டா சூரி நடிகராக அவதாரம் எடுத்திருக்கிறாரோ அதுபோல இவரும் ஹீரோவாக உயர்ந்து இருக்கிறார்.

வித்தைக்காரன் என்ற பட பிரமோஷனுக்காக சதீஷ் பேசிய போது தன்னையும் கீர்த்தி சுரேஷ் இணைத்து வந்த வதந்தியை கேட்டு அவரது அம்மா மேனகா தனக்கு போன் செய்து வாழ்த்துக்கள் மாப்பிள்ளை என்று சொல்ல தனக்கு ஷாக் ஆகிவிட்டதாக கூறியிருக்கிறார்.


அத்தோடு அது வதந்தி என்பது அவளுக்கும் தெரியும் என்று பேசி விட்டார். இந்நிலையில் சதீஷ் சிந்து என்பவரை 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பிறகு அந்த வதந்தி முடிவுக்கு வந்தது.

தற்போது இந்த செய்தியானது இணையத்தில் அதிக அளவு பேசப்பட்டு வருவதால் எனக்கு நீதான் மாப்பிள்ளை என்று கீர்த்தி சுரேஷ் அம்மா சதீஷிடம் பேசினாரா? என்று ரசிகர்கள் அனைவரும் அவரை கலாய்த்து தள்ளி வருகிறார்கள்.

அது மட்டும் அல்லாமல் இந்த செய்தியை ரசிகர்களின் மத்தியில் வேகமாக ஷேர் செய்து வருவதால் அதிகளவு படிக்கப்படும் செய்திகளில் ஒன்றாக இந்த செய்தி மாறிவிட்டது.

LATEST News

Trending News

HOT GALLERIES