எனக்கும் அந்த ஆசை இருக்கு.. ஆனால்.. ஒப்பனாக கூறிய உமா ஆண்ட்டி..!
கன்னட மொழியில் 400 இருக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்க கூடிய உமாஶ்ரீ 2008 ஆம் ஆண்டு கன்னட படமான குலாபி டாக்கீசில் குலாபி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த தேசிய திரைப்பட விருதை பெற்றவர்.
ரசிகர்களால் உமா ஆன்ட்டி என்று செல்லமாக அழைக்கப்படக்கூடிய இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் கர்நாடக சட்டமன்ற உறுப்பினராகவும் விளங்குகிறார். தமிழில் அபி என்கின்ற அபிமன்யு திரைப்படத்தில் அறிமுகமான இவர் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும், துணை கதாபாத்திரத்திலும் நடித்து அசத்தியிருக்கிறார்.
சினிமாத்துறைக்கு இவர் வருவதற்கு காரணமே இவருடைய தோழிகள் தான் என்று சினிமா அனுபவம் குறித்த பேட்டி ஒன்றில் இவர் கூறியிருக்கிறார். மேலும் சினிமாவில் இருந்த பயத்தை நீக்கி சினிமாக்குள் அழைத்து வந்தவர்கள், என்னுடைய தோழிகள் என்று கூறி அவர்களை பெருமைப்படுத்தி இருக்கிறார்.
இவர் சித்த ராமையாவின் அரசாங்கத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் நலத் துறையில் கலாச்சாரத்துறை அமைச்சராக விளங்கி இருக்கிறார்.
முதல் படத்தில் நடிக்கும் போது வசனங்களை பேச நிறைய பயம் ஏற்பட்டதாகவும் அதனை அடுத்து பல டேக்குகள் சென்றது என்ற கருத்தை வெளிப்படையாக பேசி இருக்கக்கூடிய இவர் இயக்குனர் கொடுத்த ஊக்கத்தின் மூலம் தான் இன்று நான் இன்றளவு உயந்திருக்கிறேன் என்று பேசியிருக்கிறார்.
ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே தொடர்ந்து பட வாய்ப்புகள் தனக்கு கிடைத்ததாகவும் தான் நடித்த கோழி கூவுது படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகு ஆதலால் காதல் செய்வீர் என்ற திரைப்படத்தின் வாய்ப்பு கிடைத்தது என்றார்.
அது மட்டுமல்லாமல் சினிமா வாழ்க்கையில் ஈடுபட ஆரம்பித்த பிறகு வாய்ப்புகள் தன்னைத் தேடி வந்த வண்ணம் இருந்ததாகவும் தனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு நன்றி தெரிவித்த இவர் தனக்கு இருக்கும் ஆசை பற்றி ஓப்பனாக பேசியிருக்கிறார்.
அந்த வகையில் இவருக்கும் முன்னணி நடிகர்களான ரஜினி, சூர்யா, அஜித், விஜய், கமலஹாசன் உள்ளிட்ட நடிகர்களின் படங்களில் ஏதாவது ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும என்ற ஆசை பல நாட்களாக இருப்பதாகவும் அதற்காக இன்று வரை காத்திருப்பதாகவும் கூறியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்து இவருக்கும் இந்த ஆசை இருக்கா? இதை எப்படி அழகாக ஓப்பனாக உமா ஆன்ட்டி கூறி இருக்கிறார் என்பதை ரசிகர்கள் அனைவரும் தற்போது பேசி வருவதோடு விரைவில் அவரது ஆசை பூர்த்தியாக கூடிய வகையில் திரைப்படங்கள் வந்து சேரும் எனக் கூறியிருக்கிறார்கள்.
தற்போது உமாஸ்ரீ கூறிய ஆசையானது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறிவிட்டது இதை தொடர்ந்து பேசி வரும் இவர்கள் விரைவில் ரஜினி, கமல், அஜித், விஜய் படங்களில் நடிக்க இறைவனை வேண்டுவதாக கூறியிருக்கிறார்கள்.