நடிகை அசின் சினிமாவை விட்டு விலக என்ன காரணம் தெரியுமா..
தமிழில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தின் மூலம் மலையாள நடிகையாக இருந்த நடிகை அசின், தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.
அந்த வகையில் இவர் உள்ளம் கேட்குமே, கஜினி, மஜா, வரலாறு, போக்கிரி, சிவகாசி, தசாவதாரம், வேல், காவலன் போன்ற தமிழ் படங்களில் குறுகிய காலத்திலேயே பல முன்னணி நடிகர்களோடு நடித்து 90 கிட்ஸ் விரும்பும் கனவு கன்னியாக திகழ்ந்தார்.
இதனை அடுத்து திரையுலகில் நம்பர் ஒன் நாயகி என்ற அந்தஸ்தை பிடித்து விடுவார் என ரசிகர்கள் நினைத்த வேளையில் எதிர்பாராமல் 2016-ஆம் ஆண்டு தொழில் அதிபர் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்து கொண்டு திரை உலகிற்கு பை பை சொல்லிவிட்டார்.
இதனை அடுத்து இவருக்கு தற்போது அரின் ரேய் என்ற மகள் இருக்கிறார். தற்போது வெளியில் தலையை காட்டாத அசின் சினிமாவில் இருந்து விலக காரணம் என்ன என்று தெரியுமா? பலரும் திருமணம் செய்து கொள்வதற்காக தான் இவர் சினிமாவை விட்டு விலகி விட்டார் என்று கருதுகிறார்கள். ஆனால் உண்மை அது இல்லை.
திரையுலகில் இருந்து விலகுவதற்கு காரணமே அரசியல் தான். தமிழில் அடுத்தடுத்து நடித்து வந்த அசின் பாலிவுட் சல்மான் கான் நடிப்பில் ரெடி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக இலங்கைக்கு ஷூட்டிங் சென்ற பட குழுவில் அசினும் இருந்திருந்தார். அப்போது இலங்கை போர் தமிழ்நாட்டில் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய சமயம் என்பதால் இந்தியாவில் இருந்து யாரும் இலங்கைக்கு போக வேண்டாம் என்று அரசு அறிவுறுத்திய நிலையில் இலங்கையில் இருந்தும் இந்தியாவிற்குள் வர தடை விதித்திருந்தது.
இந்த அரசியல் விவகாரத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பாலிவுட் வாய்ப்புகளை பெரிதாக நம்பிய அசின் படப்பிடிப்புக்கு இலங்கை சென்ற காரணத்தினால் இனி மேல் அசினை தமிழில் வளர விடக்கூடாது என்று சில அரசியல் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தது.
இந்த சூழ்நிலையில் தான் பாலிவுட்டில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த அசின் மீண்டும் தமிழுக்கு திரும்பி விடலாம் என்று முயற்சி செய்த போதும் இவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
அதன் பின் நடிகர் விஜய் காவலன் படத்தில் வாய்ப்பு கொடுத்த போதும் அந்த படம் பல சிக்கல்களில் சிக்கித் தவித்தது. இதை புரிந்து கொண்ட அசின் இனிமேல் சினிமாவில் நடிப்பதை விட விலகி விடுவது சாலச் சிறந்தது என கருதி திருமணம் செய்து கொண்டு திரை உலகிற்கு டாட்டா காட்டிவிட்டார்.