இந்த அசிங்கம் தேவையா கோபி.. பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ.
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரின் டிஆர்பி ரேட்டிங் கடந்த சில வாரங்களாக குறைந்துகொண்டே வருகிறது. பரபரப்பாக எந்த விஷயமும் கதையில் வராதது தான் அதற்கு காரணம்.
தற்போது பாக்கியலட்சுமி ஒரு பொருட்காட்சி காண்ட்ராக்ட் எடுக்க முயற்சித்து அது நடக்காததால் 1.5 லட்சம் பணத்தை இழந்துவிட்டு என்ன செய்வது என தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கிறார். அதை வைத்து கோபி மற்றும் அவரது அம்மா இருவரும் சேர்ந்து பாக்யாவை ஓவராக விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தற்போது அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கோபி பாக்யாவை கிண்டல் செய்து பேசிக்கொண்டிருக்க, ராதிகா வந்து அவரை திட்டுகிறார்.
பாக்யாவை ஊக்குவிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை ஏன் இப்படி பேசுறீங்க என கேட்கிறார்.
'இவ்வளவு புத்திசாலியாக இருக்கும் நீ இவனை எப்படி கல்யாணம் பண்ண' என கோபியின் அப்பா கூறி அசிங்கப்படுத்தி இருக்கிறார். ப்ரோமோ இதோ..