அஜித், கமலை தொடர்ந்து Pan இந்தியா ஸ்டாருக்கு ஜோடியாகும் திரிஷா.. படத்தின் பட்ஜெட் 300 கோடியா...
நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய தவறான பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான நடவடிக்கைகளும் அவருக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நேரத்தில், தான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என கூறியுள்ளார்.
இது எங்கு போய் முடியபோகிறது என தெரியவில்லை. இது ஒரு பக்கம் இருக்கட்டும். திரிஷாவின் சினிமா கெரியர் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. அது என்னவென்று பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் தற்போது பிஸியான முன்னணி நடிகை யார் என்று கேட்டால் அனைவரும் கூறும் ஒரே பதில் நடிகை திரிஷாவாக தான் இருக்கும்.
விஜய்யுடன் லியோ படத்தை முடித்த கையோடு, அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து கமலின் 234வது படத்தில் மணி ரத்னம் படத்தில் நடிக்கவுள்ளார்.
இதற்கான அறிவிப்பு சமீபத்தில் தான் வெளிவந்தது. மேலும் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் ராம் பார்ட் 1 படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி தொடர்ந்து தன்னை பிஸியாக வைத்திருக்கும் நடிகை திரிஷா அடுத்ததாக அல்லு அர்ஜுனின் 22வது படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். படத்தின் பட்ஜெட் மட்டுமே ரூ. 300 கோடி என்கின்றனர். இப்படத்தை தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கவுள்ளாராம். இதன்மூலம் த்ரிவிக்ரம் இயக்கத்தில் இரண்டாவது முறையாக திரிஷா நடிக்கவுள்ளார்.
ஏற்கனவே கடந்த 2005ஆம் ஆண்டு தெலுங்கு வெளிவந்த Athadu எனும் திரைப்படத்தில் த்ரிவிக்ரம் இயக்கத்தில் திரிஷா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.