பிக் பாஸ் வீட்டில் கர்ப்பமான பிரபல போட்டியாளர் பரபரப்பு தகவல்
பிக் பாஸ் ஷோ என்றாலே சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது. அதற்காகவே அந்த ஷோவுக்கு எக்கச்சக்க அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
தமிழில் பிக் பாஸ் 7ம் சீசன் நடந்து வரும் நிலையில் ஹிந்தியில் தற்போது 17ம் சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஹிந்தி நடிகை அங்கிதா லோகன்டே மற்றும் அவரது கணவர் தொழிலதிபர் விக்கி ஜெயின் ஆகியோர் போட்டியாளர்களாக வந்திருக்கின்றனர்.
சில வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட தோனி பட நடிகர் சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலி தான் அங்கிதா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை அங்கிதா பிக் பாஸ் வீட்டில் pregnancy டெஸ்ட் எடுத்திருப்பதாக கூறி இருக்கிறார். அதற்கான ரிசல்ட்டுக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். இந்த செய்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தான் வீட்டுக்கு செல்ல விரும்புவதாகவும் அவர் கூறி இருக்கிறார்.