மூன்று நாட்களில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா..
கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று ஜிகர்தண்டா.
வித்தியாசமான திரைக்கதை மாறுபட்ட இயக்கம் என தமிழ் சினிமாவை திரும்பிப்பார்க்க வைத்தார் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ்.
முதல் பாகம் வெற்றியை தொடர்ந்து தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் எனும் தலைப்பில் அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். முதல் பாகத்தின் கதைக்கருவை மட்டுமே வைத்து இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார்.
ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா இருவரும் இணைந்து நடித்து கடந்த வாரம் வெளிவந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படம் வெளிவந்து மூன்று நாட்களில் முடிவடைந்துள்ள நிலையில் உலகளவில் ரூ. 16 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.