பிக்பாஸ் வீட்டிற்குள் பிரதீபின் ரீ என்றி.. தரமான சம்பவம்: உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப், தன்னை மீண்டும் அழைக்கும் பிக்பாஸ் குழுவுக்கு கண்டிஷன் போட்டு வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் காட்டு தீ போல் பரவிவருகின்றது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமான பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து திடீரென்று வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனால் ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
சக போட்டியாளர்களிடம் கூட சொல்ல விடாமல் அவரை கன்பெக்ஷன் ரூமில் இருந்து அப்படியே வெளியேற்றி இருந்தனர். அதனால் கடுப்பான ரசிகர்கள் தங்களின் ஆதங்கத்தை பல்வேறு வகையிலும் வெளிப்படுத்துகின்றனர்.
பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கியது. இந்த சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் முதல் வாரம் அனன்யா எலிமினேட் ஆனதை அடுத்து மறுதினமே பவா செல்லதுரை உடல்நலக்குறைவு காரணமாக வெளியேறினார்.
தமிழ் சினிமாவில் துணை நடிகராக இருக்கும் பிரதீப் ஆண்டனி, பிக்பாஸ் 7 போட்டியில் வலுவான போட்டியாளர்களுள் ஒருவராக கருதப்பட்டார். போட்டி, கேம்-அதற்கான யுக்தி என இவர் செய்த சில விஷயங்கள் பிக்பாஸ் போட்டியாளர்களாலும் ரசிகர்களாலும் விமர்சிக்கப்பட்டது.
ஆனாலும், இவருக்கு ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்தனர். இந்த நிலையில், கடந்த வார எபிசோடின் போது அவருக்கு எதிராக பிக்பாஸ் போட்டியாளர்கள் சிலர் உரிமை குரல் எழுப்பினர். கூல் சுரேஷை மரியாதை குறைவாக பேசினார் என்ற பிரச்சனையில் ஆரம்பித்து, பெண்கள் குறித்து ஆபாசமாக பேசுகிறார் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தது.
பிரதீப்பால் தாங்கள் பாதுகாப்பு இல்லாதது போல உணர்வதாக சில போட்டியாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கமல் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரையும் தனியாக அழைத்து பிரதீப்பிற்கு ரெட் கார்டு கொடுக்கலாமா வேண்டாமா என்று கேட்டார். இதில் பெரும்பாலானோர் ரெட் கார்டு கொடுக்கலாம் என்று தெரிவித்தனர். இதையடுத்து அவர் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
பிரதீப் ஆண்டனி பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் திரண்டனர். சமூக வலைதளங்களில் பிக்பாஸ் பாேட்டியாளர்கள் என்னென்ன குற்றச்சாட்டுகளை வைத்திருந்தனரோ அந்த குற்றச்சாட்டுகள் அனைத்தின் வீடியோவையும் எடுத்து வைரலாக்க ஆரம்பித்தனர்.
அதில் சிலவற்றில் பிரதீப்பின் மீது தவறு அல்ல என்பது போன்ற ஆதாரங்கள் கிடைத்தன. இதற்கிடையில், பிக்பாஸ் இல்லத்தில் இருக்கும் போட்டியாளர்கள் குழுவாக ஒருவரை மட்டும் டார்கெட் செய்வதாக ரசிகர்கள் கருதினர்.இதனால், பிரதீப் மீது குற்றச்சாட்டு வைத்தவர்கள் மீது ரசிகர்கள் வெறுப்பு காட்டி வருகின்றனர்.
பிரதீப், பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியில் வந்ததில் இருந்து தனது ட்விட்டர் பக்கத்தில் சில பதிவுகளை வெளியிட்டுள்ளார். இந்த பதிவுகள் பிரதீப் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் ரீ என்றி கொடுப்பார் என்பதை உணர்த்துவதாக அமைகின்றது. மேலும் இவரின் ரீ என்றி குறித்து ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.
Romba sarpana pullingala ala dhan adhu mudiyum 🔥@EndemolShineIND if you are considering sending me in, I want two red cards to send off 2 contestants who conspired against me and I want to be the Captain - 7th week of BB7 ⭐
— Pradeep Antony (@TheDhaadiBoy) November 10, 2023
https://t.co/MhTwRzhT0E#PaathuSeinga #GamerLife