பிக்பாஸ் வீட்டுக்குள் விதியை மீறும் ஐஷூ - மாயா : கடுப்பாகிய ரசிகர்களின் எதிர்ப்பு
மாயா, ஐஷூவுக்கு பிக் பாஸ் வீட்டுக்குள் ஏற்கெனவே எதிர்ப்பு அதிகமாகி வரும் நிலையில் அவர்கள் விதி மீறி இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது.
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மக்களின் மனதில் பெரிய அளவில் இடம் பிடித்து இருப்பது பிக்பாஸ் தான்.
இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். இதுவரைக்கும் இந்த சீசன் 6 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துவிட்டு இப்போது 7வது சீசன் வெற்றி நடைபோடுகின்றது.
பிக் பாஸ் இல்லத்திற்குள் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றியதற்கு முக்கிய காரணம் மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ஐஷூ கேங்க்தான் என ரசிகர்களும், பிக் பாஸ் போட்டியாளர்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
உள்ளே இருக்கும் நிக்சன் போட்டியாளர்களிடம் அத்துமீறி நடப்பது மாயா சதிவேலை செய்வது, மாயா மீது ஏற்கெனவே எழுந்த பாலியல் புகார் போன்றவை காரணமாக இவர்களுக்கு முதலில் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்ற வேண்டும் என பார்வையாளர்கள் சொல்லி வருகின்றனர்.
இந்நிலையில், மாயா மைக்கை கழற்றி வைத்துவிட்டு ஐஷூவை பாத்ரூமிற்குள் அழைத்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதற்கு பார்வையாளர்கள் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், மாயாவும் ஐஷுவும் மைக்கை கழட்டி வைத்துவிட்டு ஒரே பாத்ரூமுக்குள் செல்லும் வீடியோ தற்போது இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
This is Highly Condemnable !! 🚫
— Deepak (@DeepakC79701581) November 10, 2023
Video 1 - Moving the Mic away for not hearing clearly
Video 2 - Removing mics and going into the same Bathroom
We as People have every right to judge them. They cannot hide those
Condemnable 🚫🚫#BiggBossTamil #BiggbossTamil7 pic.twitter.com/hNACi7Aw38