இணையத்தில் லீக்கான லியோ படத்தின் HD Print.. அதிர்ச்சியில் படக்குழு, ரசிகர்கள்...
கடந்த மாதம் பிரமாண்டமாக வெளிவந்த திரைப்படம் லியோ. தளபதி விஜய்யின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. முதல் நாளே ரூ. 148 கோடிக்கும் மேல் வசூல் செய்த லியோ படம் இதுவரை உலகளவில் ரூ. 553 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
அதே போல் பல இடங்களில் பிரேக் ஈவன் ஆகியுள்ளது. மேலும் மற்ற முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் செய்த வசூல் சாதனையையும் லியோ தொடர்ந்து முறியடித்து வருகிறது.
இதனால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறார். ஆனால், அவர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் விஷயம் ஒன்று நடந்துள்ளது. லியோ படத்தின் HD Print இணையத்தில் லீக்காகியுள்ளது.
அதிகாரபூர்வமாக Netflix தளத்தில் வெளியாவதாக இருந்த லியோ படத்தின் HD Print திடீரென லீக்கானதால் படக்குழு அதிர்ச்சியுள்ளனர்.