நோயை காரணம் காட்டி சினிமாவிலிருந்து திடீர் விலகல்.. இன்ஸ்டா பதிவால் கதிகலங்கி போன ரசிகர்கள்!
நோயை காரணம் காட்டி பிரபல இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்திரன் சினிமாவிலிருந்து விலக போவதாக தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்தியா - கேரளா மாநிலத்தில் பிறந்தவர் தான் அல்ஃபோன்ஸ் புத்திரன், இவர் “நேரம்” என்ற திரைப்படத்தை இயக்கி சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார்.
இந்த திரைப்படம் மலையாள சினிமாவில் சிறந்த இடத்தை பெற்றுக் கொடுத்தது.
இதனை தொடர்ந்து “ப்ரேமம்” படத்தை இயக்கி மலையாள சினிமாவை மற்றும் இன்றி,தமிழ் சினிமா ரசிகர்களையும் கவர்ந்தார்.
மலையாளத்தில் மட்டுமல்ல தமிழில் சாண்டி, கோவை சரளா நடிப்பில் உருவாகியிருக்கும் “கிஃப்ட்” திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.
இப்பயொரு நிலையில், சினிமாவிலிருந்து விலக போவதாக ஒரு அறிவிப்பை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், " சினிமா தியேட்டர் கேரியரை நிறுத்துகிறேன்.
எனக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு இருப்பதை நானே நேற்று தெரிந்துகொண்டேன். நான் பிறருக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. ஆனாலும், பாடல்கள், வீடியோ, குறும்படங்கள் அதிகபட்சமாக OTT படங்களை கொடுப்பேன்.
எனக்கு சினிமாவிலிருந்து விலக விருப்பமில்லை, ஆனாலும், வேறு வழி தெரியவில்லை. செய்யமுடியாத ஒன்றிற்கு சத்தியம் கொடுக்க விரும்பவில்லை.
வாழ்வில் உடல் பலவீனமாக இருந்தாலோ, வாழ்க்கை நினைத்தபடி இல்லை என்றாலோ அது மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி பிரேமம் போன்று திரைப்படங்களை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் மனதில் இடியாக விழுந்துள்ளது.