கணவரின் நண்பரை காதலித்த பாவனி ரெட்டி.. அவரை திருமணம் செய்ய காரணம்.. வெளியான தகவல்..!

கணவரின் நண்பரை காதலித்த பாவனி ரெட்டி.. அவரை திருமணம் செய்ய காரணம்.. வெளியான தகவல்..!

மிகச்சிறந்த மாடல் நடிகையான நடிகை பாவனி ரெட்டி தமிழ் மொழி தொலைக்காட்சி தொடரான சின்னத்தம்பி தொடரில் கதாநாயகியாக நடித்து அனைவரது மனதிலும் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார்.
இவர் தனது 21 வது வயதில் இருந்து மாடலிங் செய்வதை ஆரம்பித்த இவர் 2015-இல் ரெட்டைவால் குருவி என்ற திரைப்படத்தில் முதல் முதலாக நடித்ததை அடுத்து 2016-ஆம் ஆண்டில் இஎம்ஐ தவணை முறை வாழ்க்கை படத்திலும் நடித்திருக்கிறார்.

எனினும் இந்த படத்தின் மூலம் பெரிய அளவு பேமஸ் ஆகாத இவர் சின்ன தம்பி தொலைக்காட்சி தொடர் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.தமிழ் மொழி மட்டுமல்லாமல் மலையாள சீரியல்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார்.
மேலும் இவர் ஹிந்தி, தெலுங்கு, தமிழ் மொழிகளில் சில படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் தமிழில் துணிவு, ஜூலை காற்றில், மொட்ட சிவா கெட்ட சிவா, இனி அவனே, 465 போன்ற படங்களில் நடித்த இவர் வஜ்ரம் என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் பிக் பாஸ் பாவனி ரெட்டியின் இரண்டாவது காதல் குறித்து அவரது சகோதரி சமூக வலைத்தளங்களில் சில பதிவுகளை வெளியிட்டு இருக்கிறார். இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாக மாறி வருகிறது.

பாவனி ரெட்டி திருமணம் செய்து கொண்டு எட்டே மாதத்தில் அவரது கணவர் தற்கொலை செய்து கொண்டது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் இது தொடர்பாக எந்த ஒரு தகவலையும் வெளியிடாத நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாவனி  முதல் முதலாக தனது திருமண வாழ்க்கை பற்றி மனம் திறந்து பேசினார்.
அந்த வகையில் இவரது மூத்த சகோதரி சிந்து என்பவர் பாவனி ரெட்டியின் இரண்டாவது திருமணம் குறித்து பரவி வந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகையில் தற்போது செயல்பட்டு இருக்கிறார்.

அதில் பாவனி ரெட்டி தனது கணவர் மறைவுக்குப் பிறகு வேறொருவரை விரும்பி வருகிறார். அவர்களின் விருப்பப்படியே குடும்பத்தாரும் நல்ல வாழ்க்கையை அமைத்துத் தர விரும்புகிறார்கள்.

ஆனால் சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்ட நிலையில் கடந்த நான்கு வருடங்களாக மிகவும் கண்ணியமாகவும், தைரியமாகவும் தனித்து வாழ பவானி ரெட்டி கற்றுக் கொண்டார்.
இனிமேல் அவருக்கு அவருடைய புதிய பயணத்தில் பயணிக்க நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும். அதை விடுத்து இது போன்ற வதந்திகளை பரப்புவதால் அவரது மனநிலை பாதிப்பதற்கும் சங்கடங்கள் ஏற்படுவதற்கும் வழி உள்ளது என்பதை உணர்ந்து ரசிகர்கள் நடந்து கொள்வது நல்லது என சொல்லி இருக்கிறார்.

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறி இருப்பதோடு பாவனி ரெட்டி காதலிக்கவில்லை தனியாகத் தான் வாழ்ந்து வருகிறார் என்பதை உறுதி செய்துள்ளது.

LATEST News

Trending News