மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளம்?.. இயக்குநரின் வலையில் சிக்குமா அந்த திமிங்கலம்?
டாப் நடிகரின் பட வாய்ப்பு கிடைத்ததில் இருந்தே பணத்தை தண்ணியாக அந்த இயக்குநர் செலவு செய்து வருவதாக கூறுகின்றனர். இதன் காரணமாகவே தயாரிப்பு நிறுவனத்துக்கும் டாப் நடிகருக்குமே பிரச்சனை வெடித்து சில மாதங்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக கூறுகின்றனர்.
எல்லாமே சுபமாக முடிந்து விட்டது என்றும் இனிமேல் வெளிநாட்டு செலவு இருக்காது என தயாரிப்பு நிறுவனம் நிம்மதி பெருமூச்சு விட்ட நிலையில், மீண்டும் பெரிய பில் ஒன்றை போட்டு தயாரிப்பு தரப்பிடம் அந்த இயக்குநர் கொடுத்து ஷாக்கை கிளப்பியுள்ளதாக கூறுகின்றனர்.
தமிழ் சினிமாவில் இந்தளவுக்கு ஒரு திட்டமிடலே இல்லாமல் எப்படி அந்த இயக்குநர் செயல்பட்டு வருகிறார் என்கிற பேச்சுக்கள் தான் தற்போது கோடம்பாக்கத்தில் கொளுந்து விட்டு எரிந்து வருகிறது.
ரீமேக் படத்திற்கு இந்தளவுக்கு செலவு செய்து படமாக்க வேண்டுமா? என்றும் சரியான பிளான் இருந்தால் இந்த படத்தின் பட்ஜெட்டை பாதியளவு குறைத்திருக்கலாம் என தயாரிப்பு தரப்புக்கும் இயக்குநர் தரப்புக்கும் எழுந்த வாக்குவாதம் தான் படத்திற்கு பெரிய பஞ்சாயத்தையே கூட்டியது என்கின்றனர். அதன் பின்னர், நடிகர் நீங்க ரெண்டு பேரும் நல்லா சண்டை போடுங்க எனக்கு அடுத்த புரொட்யூசர் வெயிட்டிங் என கிளம்பிய நிலையில், மீண்டும் நடிகரை சமாதானப்படுத்தி அந்த தயாரிப்பு நிறுவனம் படத்தை முடிக்க போராடி வருகிறது.
ஒரு வழியாக வெளிநாட்டு செலவுகள் எல்லாம் ஓவர் என நினைத்துக் கொண்டிருந்த நிலையில், எடிட் செய்து பார்த்த இயக்குநருக்கு சில இடங்களில் சில பிரச்சனைகள் தெரிய வர, மறுபடியும் அந்த இடத்துக்கே சென்று படப்பிடிப்பை நடத்த வேண்டும் என்கிற யோசனை வந்து விட்டதாம். இங்கே ஏதாவது பேட்ச் வொர்க் செய்து முடிக்கலாம் என்று பார்த்தால் அதற்கெல்லாம் வழியே இல்லை என்று கூறி விட்டாராம்.
இயக்குநரின் வலையில் அந்த பெரிய தயாரிப்பு நிறுவனம் மறுபடியும் சிக்குமா? ஏற்கனவே பிரம்மாண்டம் அந்த தயாரிப்பு நிறுவனத்தை மொத்தமாக உருவி எடுத்து முடித்து விட்ட நிலையில், அதே வேலையை இவரும் செய்து விடுவாரா என்கிற அச்சமும் தயாரிப்பு நிறுவனத்துக்கு அதிகமாகவே உள்ளதாக கூறுகின்றனர்.
டாப் நடிகரும் டபுள் கால்ஷீட் போட்டு வேலை பார்த்து வரும் நிலையில், மீண்டும் வெளிநாட்டுக்குச் சென்றால், அந்த படத்தின் ஷூட்டிங் பாதிக்கும் என்று கறாராக சொல்லி விட்டாராம். இந்நிலையில், இயக்குநர் அந்த காட்சிகளை எப்படி சரி செய்வது என முழி பிதுங்கி வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.