சொக்குப்பொடி போட்டு ஹீரோவை மடக்கிய நடிகை.. மீண்டும் மலை ஏறிய பொண்டாட்டி

சொக்குப்பொடி போட்டு ஹீரோவை மடக்கிய நடிகை.. மீண்டும் மலை ஏறிய பொண்டாட்டி

எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய கதை தான் மாஸ் ஹீரோவின் வீட்டில் நடந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அவருடைய மனைவி நடிகர் மேல் தீராத கோபத்தில் இருக்கிறார்.

இதற்கு முக்கிய காரணம் அந்த வாரிசு நடிகை தான். நடிகரை வளைத்து போட்ட அந்த சேச்சி ரகசிய குடித்தனமே நடத்தி வந்தார். அவருக்காக நடிகரும் தனி வீடு, புது படம் என பல செலவுகள் செய்து வந்தார்.

இது வீட்டில் கலகத்தை உண்டாக்கிய நிலையில் திடீரென மூன்றெழுத்து நடிகையும் போட்டிக்கு வந்திருக்கிறார். சமீபத்தில் ஹீரோ உடன் இவர் இணைந்து நடித்த படத்தில் கெமிஸ்ட்ரி நன்றாகவே பற்றி கொண்டது.

அப்போதே இருவரும் வெளிநாட்டில் சுற்றி திரிந்த நிலையில் மனைவி பெரும் பஞ்சாயத்தே வைத்தார். ஆனாலும் ஹீரோ அதை கண்டுக்காமல் தன் லீலையை நடத்தி வந்திருக்கிறார்.

அதன் பிறகு சில சமரசங்கள் நடந்த நிலையில் இப்போது தான் மனைவி கொஞ்சம் கொஞ்சமாக கோபத்தை குறைத்து வருகிறாராம். ஆனால் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக நடிகர் அந்த நடிகையுடன் வெளிநாடு சென்றுள்ளார்.

ஒன்றாக சென்றால் மாட்டிக் கொள்வோம் என இருவரும் தனித்தனியாக சென்று விடுமுறையை என்ஜாய் செய்து வருகிறார்களாம். இதனால் மீண்டும் நடிகரின் மனைவி கடும் அப்செட்டில் இருக்கிறார். இது எங்க போய் முடியப் போகுதோ என திரையுலகில் சத்தம் இல்லாமல் கிசுகிசுத்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES