ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய அசோக் செல்வன்.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!
சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். முதல் படமே இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.
இதன்பின் இவருக்கு ஹீரோவாக முத்திரை பதித்த படம் என்றால் அது தெகிடி தான். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கூட்டத்தில் ஒருத்தன், ஓ மை கடவுளே, சில நேரங்களில் சில மந்திரங்கள், நித்தம் ஒரு வானம் என நல்ல நல்ல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தார்.
இதையெல்லாம் விட அசோக் செல்வனுக்கு ப்ளாக் பஸ்டர் வெற்றி படமாக இந்த ஆண்டு வெளிவந்த போர் தொழில் அமைந்தது. சிறப்பான தரமான சஸ்பென்ஸ் திரில்லர் என்று ரசிகர்கள் அனைவராலும் இப்படம் கொண்டாடப்பட்டது.
மேலும் அடுத்ததாக அசோக் செல்வன் நடிப்பில் ப்ளூ ஸ்டார் மற்றும் சபா நாயகன் எனும் திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
சமீபத்தில் தான் நடிகர் அசோக் செல்வன் பிரபல நடிகை கீர்த்தி பாண்டியனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 10 ஆண்டுகள் இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் கடந்த மாதம் தான் திருமணம் நடந்தது.
இந்நிலையில் அசோக் செல்வனின் லேட்டஸ்ட் லுக் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதை பார்த்த ரசிகர்கள் சற்று ஷாக்கியுள்ளனர். அசோக் செல்வனா இது என கேட்டு வருகிறார்கள். அந்த அளவிற்கு ஆள் அடையாளம் தெரியாமல் மாறியிருக்கிறார். இதோ அந்த புகைப்படம்..