தன் மனைவி ஆசைப்பட்ட கதையில் நடித்த விஜய்- எந்த படம் தெரியுமா, அதனால் வந்த பிரச்சனை.
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக உள்ளார். இந்த வருடம் இவரது நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் சரியான வெற்றியை சந்திக்கவில்லை, அடுத்து அவர் நடித்துள்ள திரைப்படம் தான் லியோ.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்-த்ரிஷா நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜோடி சேர்ந்து நடிக்க வரும் அக்டோபர் 19ம் தேதி படமும் வெளியாக இருக்கிறது. Seven Screen Studio தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தை தொடர்ந்து விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்க இருக்கிறார்.
திருமண நிகழ்ச்சியோ, பட நிகழ்ச்சியோ அதிகம் தனது மனைவி சங்கீதாவுடன் விஜய் கலந்துகொண்டிருக்கிறார். தற்போது தனது மனைவி ஆசைக்காக விஜய் நடித்த ஒரு படம் குறித்து தகவல் வந்துள்ளது.
அதாவது சங்கீதாவுக்கு ஏ.எல்.விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் திரைப்படம் ரொம்பவே பிடிக்குமாம். எனவே அவரது இயக்கத்தில் விஜய் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டாராம்.
கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள்வரை தனது ஆசையை விஜய்யிடம் வலியுறுத்திக்கொண்டே இருந்தாராம் சங்கீதா. ஏ.எல். விஜய்யை அழைத்து ஏதாவது கதை இருக்கிறதா என விஜய் கேட்க அவர் தலைவா கதையை சொல்லியிருக்கிறார்.
அப்படி தான் விஜய் தலைவா படத்தில் நடித்துள்ளார், அப்படத்தால் பல பிரசசனைகளையும் சந்தித்துள்ளார்.