மீண்டும் மணமேடையில் விஷ்ணுகாந்த்.. ஆனா பொண்ணு யார்-ன்னு தெரியுமா...

மீண்டும் மணமேடையில் விஷ்ணுகாந்த்.. ஆனா பொண்ணு யார்-ன்னு தெரியுமா...

நடிகர் விஷ்ணுகாந்த் மீண்டும் மணமேடையில் வேறு ஒரு பெண்ணுடன் இருக்கும் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரஜினி, கோகுலத்தில் சீதை, என்றென்றும் புன்னகை, சிப்பிக்குள் முத்து, ஆகிய சீரியல்களில் நடித்து பிரபலமாகியவர் நடிகர் விஷ்ணுகாந்த்.

  “சிப்பிக்குள் முத்து” என்ற சீரியலில் நடிக்கும் போது அவருடன் சேர்ந்து நடித்த நடிகை சம்யுக்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்கள் திருமணம் செய்து தற்போது இரண்டு மாதங்கள் தான் ஆகின்றது. இருந்த போதிலும் இவர்களுக்கு ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இருவரும் பிரிந்து விட்டனர்.

மீண்டும் மணமேடையில் விஷ்ணுகாந்த்.. ஆனா பொண்ணு யார்-ன்னு தெரியுமா? | Video Of Actor Vishnu Kanth At The Weddingமேலும் இவர்களின் பிரிவை உறுதிப்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராம் பக்கங்களிலிருந்து திருமணத்தின் போது ஜோடியாக எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என அனைத்தையும் நீக்கியுள்ளனர்.

இந்த நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் விஷ்ணுகாந்த் வேறு ஒரு பெண்ணுடன் மணக்கோலத்தில் இருக்கும் காட்சியை ரீல்ஸாக பதிவிட்டுள்ளார்.

மீண்டும் மணமேடையில் விஷ்ணுகாந்த்.. ஆனா பொண்ணு யார்-ன்னு தெரியுமா? | Video Of Actor Vishnu Kanth At The Weddingஒரே மாதத்தில் விவாகரத்து பெற்று பிரிந்த சமியுக்தா - விஷ்ணுகாந்த் இருவரும் அவரிகளின் வேலையில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இப்படியொரு நிலையில் சீரியலில் திருமணம் காட்சிகள் எடுக்கும் பொழுது அதனை வீடியோவாக பதிவு செய்து பகிர்ந்து ரசிகர்களை வெறுப்பேற்றி வருகிறார்.

இந்த வீடியோக்காட்சியை பார்த்த இணையவாசிகள், “ மீண்டும் திருமணமா?” என கலாய்த்து வருகிறார்கள்.    

LATEST News

Trending News

HOT GALLERIES