இணையத்தளத்தில் வைரலாகும் ஓவியாவில் கலக்கல் புகைப்படங்கள்... எப்படி மாறிட்டாங்க!
தமிழ் திரையுலகில் கடந்த 2010ம் ஆண்டில் வெளிவந்த ’களவாணி’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நழகை ஓவியா தற்போது தனக்கொன ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டுள்ளார்.
களவாணி திரப்படத்தின் பின்னர், தொடர்ச்சியாக அடுத்தடுத்து பல படங்களிலும் நடித்திருந்தாலும் இவருக்கு பெரிய அளவிலான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 2017ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது ஆரவ்வை காதலித்து உளவியல் ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டு பல பிரச்சினைகளை சந்தித்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஓவியாவின் வெகுளித்தனமும், வெள்ளந்தியான பேச்சும் ரசிகர்களை ஈர்த்தது. இதனால் அதிகமாக 2017 ஆம் ஆண்டு கூகுலில் தேடப்பட்ட நடிகைகளின் பட்டியலில் முதலிடம் பெற்றார்.
அதன் பின்னர் இவருக்கு ரசிகர்கள் பேராதரவு கொடுத்தனர். திரையுலகில் கிடைக்காத புகழும் பிரபலமும் அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் ஓவியாவுக்கு கிடைத்தது.
இதன் பின்னர் திரைபடங்களில் வாய்ப்புகள் பெரிதாக இல்லை என்றாலும் சமூக வலைத்தலங்களில் கலக்கல் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிக்கேற்றி வருகின்றார்.