வைகைப் புயல் காமெடி கிங் நடிகர் வடிவேலுவின் வாழ்க்கை வரலாறு- ஓர் பார்வை.

வைகைப் புயல் காமெடி கிங் நடிகர் வடிவேலுவின் வாழ்க்கை வரலாறு- ஓர் பார்வை.

வைகைப் புயல் வடிவேலு இந்த பெயருக்கு பின்னால் நிறைய விஷயங்கள் நியாபகம் வரும். தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகராக உள்ளார்.

அண்மையில் இவரது நடிப்பில் சந்திரமுகி 2 படம் வெளியாகியுள்ளது, அப்படத்தில் வடிவேலுவின் நடிப்பு செமயாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

வைகைப் புயல் காமெடி கிங் நடிகர் வடிவேலுவின் வாழ்க்கை வரலாறு- ஓர் பார்வை | Actor Vadivelu Biography In Tamil1988ம் ஆண்டு டி.ராஜேந்தர் இயக்கிய என் தங்கை கல்யாணி என்ற திரைப்படத்தில் ஒரு சிறுவேடம் ஏற்று நடித்திருப்பார். பின் 1991ல் கஸ்தூரி ராஜா இயக்கிய என் ராசாவின் மனசிலே என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.

இவரின் நகைச்சுவை முத்திரை பதித்த படங்கள் என்றால் ப்ரண்ட்ஸ், வின்னர், சச்சின், சந்திரமுகி, மருதமலை, கிரி, தலைநகரம்,, இங்கிலீஷ்காரன், காதலன், ராஜகுமாரன், காலம் மாறிப்போச்சு, ராசையா, பாரதி கண்ணம்மா, பாட்டாளி, இம்சை அரசன் 23ம் புலிகேசி, போக்கிரி என சொல்லிக்கொண்டே போகலாம்.

வைகைப் புயல் காமெடி கிங் நடிகர் வடிவேலுவின் வாழ்க்கை வரலாறு- ஓர் பார்வை | Actor Vadivelu Biography In Tamil

நடிகர் வடிவேலு செப்டம்பர் 12, 1960ம் ஆண்டு நடராஜன் மற்றும் வைத்தீஸ்வரி ஆகியோருக்கு மகனாக மதுரையில் பிறந்தவர். பள்ளியில் படித்த அனுபவம் இல்லை, சிறு நாடகங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

தந்தை இறந்துவிடவே குடும்பம் வறுமைக்குள்ளானதால் மதுரையில் உள்ள புகைப்படங்களுக்கு கண்ணாடி பிரேம்கள் செய்யும் ஒரு சிறிய கடையில் வேலை செய்து வந்துள்ளார்.

சரோஜினி என்பவரை திருமணம் செய்த வடிவேலுவிற்கு கன்னிகாபரமேஸ்வரி, கார்த்திகா, கலைவாணி ஆகிய மகள்களும் சுப்ரமணியன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

வைகைப் புயல் காமெடி கிங் நடிகர் வடிவேலுவின் வாழ்க்கை வரலாறு- ஓர் பார்வை | Actor Vadivelu Biography In Tamilசங்கரின் இயக்கத்தில் வெளியான காதலன் படத்திற்கு முன்பு வரை கவுண்டமணி-செந்தில் நடித்த நகைச்சுவை காட்சிகளில் சிறுசிறு கதாபாத்திரங்களில் வந்து சென்றார். அதன்பிறகு தனக்கென்று ஒரு காமெடி வட்டாரத்தை வைத்து அசத்தல் காமெடி காட்சிகள் கொடுத்து வந்தார்.

வெற்றிக் கொடி கட்டு படத்தில் பார்த்திபனுடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள், ப்ரண்ட்ஸ் திரைப்படம், வின்னர் போன்ற படங்கள் அவரின் திரை வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது.

வைகைப் புயல் காமெடி கிங் நடிகர் வடிவேலுவின் வாழ்க்கை வரலாறு- ஓர் பார்வை | Actor Vadivelu Biography In Tamil

 

வின்னர் படத்தில் நினைத்துப் பார்த்தாலே சிரிப்பு வரும் அளவிற்கு உடல் அசைவு, உடை, முக பாவனை, வசனங்கள் என அனைத்திலும் முத்திரைப் பதித்திருப்பார்.

இவர் இரட்டை வேடத்தில் கதாநாயகனாக நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படம் மிகப்பெரிய திரைப்படமாக அமைந்தாலும் பின்னர் வெளியான இந்திரலோகத்தில் நா.அழகப்பன் திரைப்படம் எதிர்ப்பார்த்த அளவில் வெற்றி பெறவில்லை.

அண்மையில் தனது திரைப்பயணத்தில் ஏற்று நடிக்காத ஒரு கதாபாத்திரத்தில் அண்மையில் மாமன்னன் படத்தில் நடித்து மக்களின் பெரிய பாராட்டுக்களை பெற்றிருந்தார். இப்படம் அவரது இரண்டாவது இன்னிங்ஸின் தொடக்கம் என்றே கூறலாம்.

வைகைப் புயல் காமெடி கிங் நடிகர் வடிவேலுவின் வாழ்க்கை வரலாறு- ஓர் பார்வை | Actor Vadivelu Biography In Tamilகாலம் மாறிப்போச்சு, வெற்றிக்கொடிகட்டு, தவசி, இம்சை அரசன் 23ம் புலிகேசி, காத்தவராயன் போன்ற திரைப்படங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழ்நாடு அரசு மாநில விருது வழங்கப்பட்டது.

சந்திரமுகி, இம்சை அரசன் 23ம் புலிகேசி திரைப்படங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ஃபிலிம்பேர் விருது, மருதமலை, ஆதவன் படங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விஜய் விருது என கிடைத்துள்ளது.  

வைகைப் புயல் காமெடி கிங் நடிகர் வடிவேலுவின் வாழ்க்கை வரலாறு- ஓர் பார்வை | Actor Vadivelu Biography In Tamil

LATEST News

Trending News

HOT GALLERIES