இந்தியா சார்பில் கடந்த வருடத்துக்கான ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டுள்ள படம்..எது தெரியுமா?
2018 திரைப்படம் ஜூட் அந்தனி ஜோசப் ஆண்டனி இயக்கத்தில் நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் 2018.
இதில் அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் என பல பிரபலங்கள் நடித்திருந்தனர். கேராவில் கடந்த 2018 -ம் ஆண்டு நடந்த பெருவெள்ளத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் தயாரானது.
மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். அதில் இப்படம் 11 நாட்களில் ரூபாய். 100 கோடிக்கும் வசூல் செய்து மோலிவுட்டில் சாதனை படைத்தது.
இந்நிலையில் 2018 படத்தை இந்தியா சார்பில் 2022 ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு அனுப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.