ஜெயம் ரவி படத்தில் நடிக்க 400 ரூபாய் சம்பளம் வாங்கிய விஜய் சேதுபதி.. உண்மை சம்பவம்!!

ஜெயம் ரவி படத்தில் நடிக்க 400 ரூபாய் சம்பளம் வாங்கிய விஜய் சேதுபதி.. உண்மை சம்பவம்..!

நடிகர்களின் சம்பளம் குறித்து தகவல் வெளிவந்தால் அது தான் அன்றைய ஹாட் நியூஸ் ஆக இருக்கும். நேற்று கூட நடிகர் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை ரூ. 70 கோடியாக உயர்த்தி விட்டார் என தகவல் வெளிவந்த கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது.

இந்நிலையில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஜெயம் ரவி படத்தில் நடித்ததற்காக ரூ. 400 சம்பளமாக வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயம் ரவி நடிப்பில் நாளை வெளிவரவிருக்கும் திரைப்படம் இறைவன்.

ஜெயம் ரவி படத்தில் நடிக்க 400 ரூபாய் சம்பளம் வாங்கிய விஜய் சேதுபதி.. உண்மை சம்பவம் | Vijay Sethupathi Gets 400 Rupees Salary

இப்படத்தின் ப்ரோமோஷன் விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் விஜய் சேதுபதி கலந்துகொண்டார். இந்த விழாவின் மேடையில் பல விஷயங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.

இதில், தான் நடிகராக முயற்சி செய்துகொண்டு இருக்கும்போது, ஜெயம் ரவியின் எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக நடிக்க வாய்ப்புக்கிடைத்தாக கூறியுள்ளார். அப்படத்தில் அவர் நடிக்க ரூ. 400 சம்பளமாக கொடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஜெயம் ரவி படத்தில் நடிக்க 400 ரூபாய் சம்பளம் வாங்கிய விஜய் சேதுபதி.. உண்மை சம்பவம் | Vijay Sethupathi Gets 400 Rupees Salary

இதற்குமுன் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக நடித்த படத்திற்கு ரூ. 200 சம்பளமாக வாங்கியதாகவும், எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் தனக்கு ரூ. 200 சம்பள உயர்வு கிடைத்ததாகவும் கூறி, தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். 

LATEST News

Trending News